உன் போல் ஏது தமிழே! மொழிகளுக்கெல்லாம் பேரரசி நீ…

உலகில் எத்தனையோ மொழி இருப்பினும் உன் போல் ஏது தமிழே! 7000 மொழிகளுக்கு மேலுள்ளன மொழிகள் இங்கு… அவற்றில் 7 மொழிகள் செம்மொழி என்கின்றது ஆராய்வு… அந்த 7 மொழிகளில் ஒன்றானவள் மட்டுமல்ல நீ, செம்மொழிக்கான மொத்த 11 தன்மைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே மொழி நீ மொழிகளுக்கெல்லாம் பேரரசி நீ வளமையும் வலிமையும் வன்மையும், மென்மையும், செம்மையும், செழுமையும் கொண்ட தன்னிகரற்ற கனித்தமிழ் நீ இன்று நேற்றல்ல, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய
 

உன் போல் ஏது  தமிழே! மொழிகளுக்கெல்லாம் பேரரசி நீ…லகில் எத்தனையோ மொழி
இருப்பினும் உன் போல் ஏது
தமிழே!

7000 மொழிகளுக்கு மேலுள்ளன
மொழிகள் இங்கு…
அவற்றில் 7 மொழிகள் செம்மொழி
என்கின்றது ஆராய்வு…
அந்த 7 மொழிகளில் ஒன்றானவள்
மட்டுமல்ல நீ, செம்மொழிக்கான
மொத்த 11 தன்மைகளையும் பூர்த்தி
செய்யும் ஒரே மொழி நீ
மொழிகளுக்கெல்லாம் பேரரசி நீ

வளமையும் வலிமையும்
வன்மையும், மென்மையும்,
செம்மையும், செழுமையும் கொண்ட
தன்னிகரற்ற கனித்தமிழ் நீ

இன்று நேற்றல்ல,
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய
தொன்மையும், நுண்மையும் கொண்ட
மூத்த மொழி நீ

உயிர் 12, மெய் 18
உயிர் மெய் 216, ஆயுதம் 1
கொண்டென் விரல் அணைக்கும்
கலைமகள் நீ

வளமையும், இளமையும்,
ஈடில்லா இலக்கணக் கட்டமைப்பும்,
இணையில்லா இலக்கியச் சிறப்பமைப்பும்
தன்னகத்தே கொண்ட தலையாய மொழி நீ

தொல்காப்பியம் தந்த இலக்கணம் நீ 
சங்கத்தமிழ் ஊட்டிய இலக்கியம் நீ
அறம் கூறும் 1330 ஈரடிகள் உடுத்திய
பார் வியக்கும் திருக்குறள் நீ

ஔவையை, ஆண்டாளை
கம்பனை, இளங்கோவை
அப்பர், சுந்தரர், சம்பந்தரை,
பாரதியை, பாரதிதாசனை
உ. வே. சாமிநாதையரை
பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரரை
அப்துல் ரகுமானை
கண்ணதாசனை
இன்னும் இன்னும் எண்ணிலடங்கா
தமிழ்ச்சூரியன்களை
புலர வைத்த காலை ஆகாயம் நீ

மாலைத் தென்றல் இதம் நீ
மல்லிகைப் பூவின் மணம்,
வெண்தூய்மை குணம்
மேன்மை எழில் நீ

மண்ணை, மக்களை, பண்பாட்டை
வாழ்ந்த நிலங்களின் உழவை
உணவை, தொழிலை,
ஆண்ட மன்னர்களை
அறிஞர்களை, சித்தர்களை,
புலவர்களை, புகழ் நாட்டியவர்களை
கலைகளை, கலைஞர்களை
வீரத்தை, காதலை, பந்தங்களை
வாழ்க்கை முறைகளை
ஆன்மீகத்தை, வழிபாட்டை
என அகமும் புறமும்
போற்றி வைத்த மரபு  நீ

சர்க்கரை போல் தித்திப்பு கொண்ட
தெவிட்டாத தனிச்சுவை நீ
மொழியே என்றாலும் எம் உயிர்
ஒத்த காதல் நீ
குணம் மேம்படுத்தும்
தந்தை நீ
மனம் மென்மைப்படுத்தும்
தாய் நீ 

எண்ணம் உயர்வுபடுத்தும்
ஆசான் நீ
சமரசம் செய்யாத
குணத்தை எனில் விதைக்கும்
என் ஆணவம் நீ
என்னை உணரச் செய்யும்
என் அடையாளம் நீ

என் அன்பு நீ
என்னை யாரென எனக்கே
அறிமுகம் தரும் என் பிள்ளை நீ
நொடியேனும் மறவாது
நான் வணங்கிடும் தெய்வம் நீ
என் அவையம் நீ
என் அனைத்தும் நீ

ஆகையால்
தமிழே!
உலகத் தாய்மொழி தினமாம் இன்று
உன்னை வாழ்த்துகிறேன்
உன்னை வணங்குகிறேன்

என்றும் வாழ்க நீ
நிலைத்து ஆள்க நீ

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

http://www.A1TamilNews.com

From around the web