மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட்? தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் ரகசிய கூட்டமா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 உயிர்களைப் பலி கொண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் சி.இ.ஓ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மதிய விருந்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தடபுடலாக நடந்த இந்த விருந்தில் தூத்துக்குடியில் பணியாற்றிவரும் முன்னணி செய்தி நிறுவன செய்தியாளர்கள் அழைக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு சிறப்பான கவனிப்புகள்
 

மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட்? தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் ரகசிய கூட்டமா?தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 உயிர்களைப் பலி கொண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் சி.இ.ஓ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மதிய விருந்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தடபுடலாக நடந்த இந்த விருந்தில் தூத்துக்குடியில் பணியாற்றிவரும் முன்னணி செய்தி நிறுவன செய்தியாளர்கள் அழைக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு சிறப்பான கவனிப்புகள் நடைபெற்றதாகவும் தகவல் பரவியுள்ளது.

ஸ்டெர்லைட் தொடர்பான போராட்டங்கள், மக்கள் எதிர்ப்பு உள்ளிட்டவைகளில் தூத்துக்குடி செய்தியாளர்கள் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

ஸ்டார் ஓட்டலில் செய்தியாளர்களை ஸ்டெர்லைட் சி.இ.ஓ சந்தித்தார் என்ற தகவல், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட உள்ளதா? அதற்கான முன்னோட்டம் தான் இந்த தடபுடல் விருந்தா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web