2019 தேர்தல் : ரஜினிகாந்த தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா? – பகுதி 15

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத் தேர்தல்கள் இரு முனைப் போட்டிகளையே சந்தித்து வருகிறது. மூன்றாவது அணி என்பது பெயரளவிலேயே இருந்துள்ளது. ஒரிரு தொகுதிகளைக் கூட மூன்றாவது அணியால் பெற முடியவில்லை என்பதே இது வரையிலும் வரலாறு. திமுகவும், அதிமுகவும் காங்கிரஸுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளார்கள். வாஜ்பாய் அரசு வந்த போது பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. ஜெயலலிதாவும் பாஜகவையும் சேர்த்து ஒரு மெகா கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். ஆனால் அவரே, கடந்த
 
 
மிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத் தேர்தல்கள் இரு முனைப் போட்டிகளையே சந்தித்து வருகிறது. மூன்றாவது அணி என்பது பெயரளவிலேயே இருந்துள்ளது. ஒரிரு தொகுதிகளைக் கூட மூன்றாவது அணியால் பெற முடியவில்லை என்பதே இது வரையிலும் வரலாறு.
 
திமுகவும், அதிமுகவும் காங்கிரஸுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளார்கள். வாஜ்பாய் அரசு வந்த போது பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. ஜெயலலிதாவும் பாஜகவையும் சேர்த்து ஒரு மெகா கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். ஆனால் அவரே, கடந்த 2014 தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டு தனியாகப் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். ‘லேடியா மோடியா’ என்ற ஜெயலலிதாவின் சவால் இந்தியா முழுவதும் ஒலித்தது.
 
தொங்கு பாராளுமன்றம் அமையும், மத்திய ஆட்சியில் பங்கு பெறலாம், முடிந்தால் பிரதமராக களம் இறங்கலாம் என்பது தான் ஜெயலலிதாவின் கணக்கு. பாஜகவின் தனி மெஜாரிட்டியால்,  தமிழகத்தில் முழு வெற்றி பெற்றாலும் அவருடைய கணக்கு தப்பி விட்டது. அவரது கட்சி எம்.பி.க்களால் தமிழ்நாட்டுக்கு எந்த  பிரயோஜனமும் இல்லை என்ற நிலை தான்.
 
க்ளீன் இமேஜ் கொண்ட ரஜினிகாந்த், தனித்துப் போட்டியிடுவதையே  தமிழக மக்கள் வரவேற்பார்கள். ரஜினியும் அதைத்தான் விரும்புவார். ஆனால் 2014 தவிர்த்து, தேர்தலுக்கு முந்தைய கூட்டணியே தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு வேளை ரஜினி வெற்றி பெற்று 2014 போல் ஆகி விட்டால், அவருக்கும் தமிழகத்திற்கும் பெரிசாக பலன் கிடைக்கப் போவதில்லை. எனவே, கூட்டணி என்பது தவிர்க்க இயலாது ஆகிறது. ரஜினிகாந்தும் இந்த முடிவில் தான் இருக்கக்கூடும்.
 
ஆனால் பாஜக, காங்கிரஸ்  இரண்டில் எந்த கூட்டணி என்றாலும் ரஜினிக்கு  ‘பலம்’ என்பதை விட ‘சுமை’ ஆக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.  பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கி, மத்தியிலும் இடம் பிடிக்கவேண்டும் என்றால், தேசிய அளவில் வலுவான மூன்றாவது அணி உருவாகவேண்டும். இது நடக்குமா என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும். 
 
இப்போதுள்ள சூழ்நிலையில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் மட்டுமே தனி ஆவர்த்தனம் செய்யும் நிலை உள்ளது. இவர்களுடன் மூன்றாவது கூட்டணி வைக்க ஆம் ஆத்மி மட்டுமே வரக்கூடும். மதச்சார்பற்ற ஜனதா தளத்தை கர்நாடகாவில் முதல்வர் பதவி கொடுத்து   காங்கிரஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டார் ராகுல். மம்தா பானர்ஜியையும் ஆம் ஆத்மியையும் வளைத்து விட்டால் ராகுலின் காங்கிரஸ் கூட்டணி அசைக்க முடியாததாகி விடும். 
 
இருவரும் வரவில்லை என்றாலும், டெல்லி, மே. வங்காளம் மட்டுமே பாதிக்கும். சந்திரபாபுவும் ராகுலும் இணையும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் இந்த மூவரும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக யார் பக்கமும் சாயலாம். ஆக, மூன்றாவது அணி என்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது. எனவே, ரஜினிகாந்துக்கு மூன்றாவது அணி என்ற சாய்ஸ் இல்லை. தனித்துப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதாவுக்கு ஆன மாதிரி, பயனற்றும் போகலாம். பாஜக, காங்கிரஸ் என இரண்டில் ஒரு கூட்டணி, ஒரு வகையில் சேஃப்டி.
 
2019 தேர்தலில்  ரஜினி கட்சி – காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது. எம்ஜிஆர் பார்முலா போல் மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற தொகுதிகள் கேட்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை. புதுவை உட்பட 10 அல்லது 11 தொகுதிகள் காங்கிரஸுக்கும் 25 தொகுதிகளில் ரஜினி கட்சியும் 4 முதல் 5 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப் படலாம்.
 
ரஜினி கட்சி – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால், அதில் விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளது.  தமாகா, ரஜினி கட்சியில் முன்னதாகவே இணைந்து விடும் என நம்பலாம்.
 
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகலாம். டிடிவி தினகரனும் சமரசத்துடன் அதிமுக திரும்பலாம். பாமக இந்தக் கூட்டணியில் இடம் பெற வாய்ப்புகள் அதிகம்.
 
இன்னொரு பக்கம் திமுக,  மதிமுக, கமல் ஹாசன் ஒரு அணியாகப் போட்டியிட்டு, தமிழகத்தில் மும்முனைப் போட்டி அமைய வாய்ப்பு இருக்கிறது.  விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேமுதிக,  சீட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பேரம் பேசி எந்தப் பக்கமும் சாயும் நிலை ஏற்படலாம்.
 
வேறு வகையான கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? அடுத்ததாகப் பார்க்கலாம்.
 
தொடரும்..
 
– மனோகரன்
 
முந்தைய பகுதிகளைப் படிக்க…

From around the web