தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் ஆவாரா?

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாகத் தெரிகிறது. தன்னுடன் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளர் ஒரு பெண்ணாகத் தான் இருப்பார் என்று முன்னதாகவே ஜோ பைடன் அறிவித்து இருந்தார். எலிசபெத் வாரன் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்கள் பெயருடன் கமலா ஹாரிஸ் பெயரும் தொடர்ந்து அடிபட்டது. இது குறித்து கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களும்
 

தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் ஆவாரா?நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாகத் தெரிகிறது.

தன்னுடன் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளர் ஒரு பெண்ணாகத் தான் இருப்பார் என்று முன்னதாகவே ஜோ பைடன் அறிவித்து இருந்தார். எலிசபெத் வாரன் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்கள் பெயருடன் கமலா ஹாரிஸ் பெயரும் தொடர்ந்து அடிபட்டது. இது குறித்து கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களும் இமெயில், மின் வாக்கெடுப்பு மூலமும் கேட்கப்பட்டது.

அனைத்து தரப்பிலிருந்தும் கமலா ஹாரிஸுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. முன்னாள் அதிபர் ஒபாமா முதல் தடவையாக அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடும் போதிலிருந்தே அவருடன் இணைந்து பணியாற்றி வருபவர் கமலா ஹாரிஸ். 8 ஆண்டுகள் ஒபாமாவுடன் துணை அதிபராக இருந்து மிகவும் நெருக்கமான நண்பராகவும் உள்ளார் ஜோ பைடன். ஒபாமாவின் ஆதரவும் கமலா ஹாரிஸுக்கு என்று தெரிகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வமாக துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஜமைக்காவை சேர்ந்த கருப்பின தந்தைக்கும், தமிழகத்தைச் சேர்ந்த தாய்க்கும் மகளாகப் பிறந்தவர் கமலா ஹாரிஸ். மருத்துவ ஆராய்ச்சியாளரான தாயார் சியாமளா கோபாலன் பராமரிப்பில் வளர்ந்த போதிலும், கருப்பின பெண்மணியாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

தமிழர்கள் சந்திக்கும் போது வணக்கம் சொல்லியே வரவேற்கும் கமலா ஹாரிஸ், சென்னையில் பாட்டி தாத்தாவுடன் கழித்த நாட்களையும், சென்னையின் அனுபவங்களையும் நினைவு கூறுகிறார். 

தற்போதைய நிலவரப்படி கொரொனா வைரஸ் விவகாரத்தினால் அதிபர் ட்ரம்ப் மீது பெரும் அதிருப்தி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியப்போட்டி உள்ள மாநிலங்களில் ஜோ பைடன் முன்னணியில் உள்ளார். ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் கூட்டணி, அதிபர் ட்ரம்ப்பிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் துணை அதிபர் ஆவாரா ? நவம்பர் 3ம் தேதி அமெரிக்க இரவு நேரத்தில் தெரிந்து விடும்

A1TamilNews.com சிறப்புச் செய்தி

From around the web