ஹெச் 1 விசாக்காரர்களுக்கு ட்ரம்ப் வழங்கும் கொரோனா நிவாரணத் தொகை கிடைக்குமா? Exclusive

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீட்பு நடவடிக்கைகளுக்காக CARES Act என்றழைக்கப்படும் The Coronavirus Aid, Relief and Economic Security Act பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு அதிபர் ட்ரம்ப்பின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தனி நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 1,200 டாலர்கள், குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2,400 டாலர்கள், குழந்தை ஒன்றுக்கு 500 டாலர்களும் கொரோனா நிவாரணத் தொகையாக வழங்கப்பட உள்ளது. அடுத்த மூன்று வாரத்தில் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் அல்லது
 

ஹெச் 1 விசாக்காரர்களுக்கு ட்ரம்ப் வழங்கும் கொரோனா நிவாரணத் தொகை கிடைக்குமா? Exclusiveமெரிக்காவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீட்பு நடவடிக்கைகளுக்காக CARES Act என்றழைக்கப்படும் The Coronavirus Aid, Relief and Economic Security Act பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு அதிபர் ட்ரம்ப்பின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தனி நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 1,200 டாலர்கள், குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2,400 டாலர்கள், குழந்தை ஒன்றுக்கு 500 டாலர்களும் கொரோனா நிவாரணத் தொகையாக வழங்கப்பட உள்ளது. அடுத்த மூன்று வாரத்தில் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் அல்லது காசோலையாக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட  மொத்த ஆண்டு வருமானம் (Adjusted Gross Annual Income) தனிநபருக்கு 75 ஆயிரம் வரை இருப்பவர்களுக்கு 1,200 டாலர்கள், கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வரை இருப்பவர்களுக்கு  2,400 டாலர்களாக கொரோனா நிவாரணத் தொகை அனுப்பி வைக்கப்படும். குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கும் தொகையில் குழந்தைளுக்கு தலா 500 டாலர்களும் வழங்கப்படுகிறது. 

தனிநபர் வருமானம் 75 ஆயிரத்திற்கு மேலாக உயரும் போது ஒவ்வொரு 100 டாலர் கூடுதல் வருமானத்திற்கு 5 டாலர்கள் அதாவது 5% நிவாரணத் தொகையில் குறைக்கப்படும். உதாரணமாக தனி நபர் வருமானம் 80 ஆயிரமாக இருந்தால், 250 டாலர்கள் குறைக்கப்பட்டு 950 டாலர்கள் நிவாரணத் தொகை வழங்கப்படும். குடும்ப வருமானம் தாக்கல் செய்த கணவன் – மனைவிக்கு 150 ஆயிரத்திற்கு மேல் வருமானம் இருந்தால் இதே 5% விதி பொருந்தும்.. 

அதிபர் ட்ரம்ப்பின் உரையின் போது அமெரிக்கக் குடிமகன்களுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். அதனால் க்ரீன்கார்டுகாரர்கள், ஹெச்1 விசாவில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த நிவாரணத் தொகை கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்தது. இது குறித்து கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக பிரபல வருமான வரி சேவை நிறுவனத்தில் பணிபுரியும் IRS Enrolled Agent அமித் மிஸ்ராவிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

அவர் கூறிய விவரம் வருமாறு,  “இந்த நிவாரணத் தொகை அமெரிக்காவில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைத்து Tax Resident Alien களுக்கும் கிடைக்கும். Tax Non Resident Alien களுக்கு இந்த நிவாரணத் தொகை கிடையாது.  பயனாளர்களின் குடியுரிமை பற்றி இந்த சட்டத்தில் கூறப்படவில்லை. ஹெச்1 விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்கள், கடந்த வருமான வரி ஆண்டில் 6 மாதங்களுக்கு மேலாக பணிபுரிந்து இருந்தால் Tax Resident Alien ஆக கருதப்படுவார்கள். அதற்குரிய வருமான வரி படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,” என்று அமித் மிஸ்ரா தெரிவித்தார்.

CARES Act ல் கொரோனா நிவாரணத் தொகை தனி நபர் பயனாளர்கள் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது, அமித் மிஸ்ரா குறிப்பிட்ட விவரங்கள் 145, 146 வது பக்கங்களில் இடம்பெற்றுள்ளதை காண முடிந்தது.

ஹெச் 1 விசாக்காரர்களுக்கு ட்ரம்ப் வழங்கும் கொரோனா நிவாரணத் தொகை கிடைக்குமா? Exclusive

CARES Act -ன் முழு வடிவத்தையும் FINAL CARES ACT இணைப்பில் காணலாம்.

IRS Enrolled Agent அமித் மிஸ்ராவின் கூற்றின் படி, அமெரிக்காவில் கடந்த ஆண்டு வருமான வரி படிவம் 1040 தாக்கல் செய்த அனைவருக்கும் கொரோனா நிவாரணத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. 1040 NR படிவம் தாக்கல் செய்தவர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை கிடைக்காது என்றும் தெரிகிறது. 

ஹெச்1 விசாக்காரர்களும், க்ரீன்கார்டு காரர்களும் அடுத்த மூன்று வாரத்தில் வங்கிக் கணக்கை அல்லது தபால் பெட்டியைப் பார்த்தால் கொரோனா நிவாரணத் தொகை கிடைத்ததா? இல்லையா? என்று தெரிந்து விடும்.

A1TamilNews.com

From around the web