ரஜினியுடன் கூட்டணியா? அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்வதைக் கேளுங்க!

அண்மையில் திரைப்பட கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலைஞானத்தை கௌரவித்தார். இந்த விழாவில் பங்கேற்ற தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தன்னை ஒரு ரஜினி ரசிகன் என்று கூறியதோடு, ரஜினிதான் என்றும் சூப்பர் ஸ்டார், வேறு யாரும் கிடையாது என்று புகழ்ந்தார். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே கழுகுமலை என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 

ரஜினியுடன் கூட்டணியா? அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்வதைக் கேளுங்க!ண்மையில் திரைப்பட கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலைஞானத்தை கௌரவித்தார். இந்த விழாவில் பங்கேற்ற தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தன்னை ஒரு ரஜினி ரசிகன் என்று கூறியதோடு, ரஜினிதான் என்றும் சூப்பர் ஸ்டார், வேறு யாரும் கிடையாது என்று புகழ்ந்தார்.

இந்த நிலையில் கோவில்பட்டி அருகே கழுகுமலை என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “அன்று மேடையில் சொன்னது போலவே, நான் ரஜினி ரசிகன்தான். எம்ஜிஆர் படங்களுக்குப் பிறகு நான் ரஜினி படங்களைத்தான் அதிகமாக ரசித்துப் பார்த்து வருகிறேன்.

அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. அது அவரது தனிப்பட்ட செயல்பாடு. அதை யாரும் கேள்வி கேட்கவோ, தடுக்கவோ முடியாது. அவர் கட்சி ஆரம்பித்தால், அவருடன் அதிமுக கூட்டணி சேருமா என்று பலரும் கேட்டு வருகின்றனர். அதுபற்றி இப்போதே ஏதும் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள். நேரம் வரும்போது அதுகுறித்து முடிவெடுக்கப்படும்,” என்றார்.

– வணக்கம் இந்தியா

From around the web