பீகாரில்  ‘தலாக்’ சொன்ன கணவனை கன்னத்தில் அறைந்த பெண்!

முசாஃபர்புர்: ஊர்ப் பஞ்சாயத்தில் மூன்று முறை தலாக் சொன்ன கணவனை கன்னத்தில் அறைந்த பெண்ணின் வீடியோ சமூகத்தளத்தில் வைரலாக பரவியது. முசாஃபர்புர் அருகே உள்ள சரய்யா கிராமத்தில் வசித்து வந்த மொகம்மது துலாரேவுக்கும் அவருடைய மனைவி சோனி கத்தூனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 2014 ஆண்டு வீட்டை விட்டுப் போய் காணமல் போன காதலர்கள் இவர்கள். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். கணவர் மொகம்மது மொபைல் கடை நடத்தி வருகிறார். காதல் திருமணம்
 
பீகாரில்  ‘தலாக்’ சொன்ன கணவனை கன்னத்தில் அறைந்த பெண்!
முசாஃபர்புர்: ஊர்ப் பஞ்சாயத்தில் மூன்று முறை தலாக் சொன்ன கணவனை கன்னத்தில் அறைந்த பெண்ணின் வீடியோ சமூகத்தளத்தில் வைரலாக பரவியது. முசாஃபர்புர் அருகே உள்ள சரய்யா கிராமத்தில் வசித்து வந்த மொகம்மது துலாரேவுக்கும் அவருடைய மனைவி  சோனி கத்தூனுக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
 
2014 ஆண்டு வீட்டை விட்டுப் போய் காணமல் போன காதலர்கள் இவர்கள். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். கணவர் மொகம்மது மொபைல் கடை நடத்தி வருகிறார். காதல் திருமணம் முடித்தவர்களுக்குள் சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால கணவன் பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
விவகாரத்தை பஞ்சாயத்து கோர்ட்டுக்கு கொண்டு வந்துள்ளார் மனைவி சோனி. அங்கே யாரும் எதிர்பாராதவிதமாக கணவன் மூன்று முறை தலாக் கூறியுள்ளார். இதனால் கோபமுற்ற சோனி, கணவனின் கன்னத்தில் பளார் பளார் என்று ஓங்கி அறைந்துள்ளார். அங்குள்ள ஒருவர் மொபைல் மூலம் எடுத்த வீடியோ சமூகத் தளத்தில் வைரலாகி விட்டது.
 
மூன்று முறை தலாக் சொல்வது கிரிமினல் குற்றம் என்று கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை உண்டு என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கணவன் மொகம்மது மீது இந்தச்சட்டம் பாயுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
– வணக்கம் இந்தியா

From around the web