திருமணத்திற்கு பட்டு சேலை அணிவது ஏன் ?

தமிழ் கலாச்சாரத்தில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விஞ்ஞான ரகசியம் ஒளிந்திருக்கிறது. நம் தமிழ் திருமணங்களில் மணப்பெண், மணமகன் இருவருக்குமே பட்டு உடுத்தி கல்யாணம் செய்விப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. பணம் செலவழித்து ஆடம்பரத்தை காட்டுவதற்காக மட்டுமல்ல இதற்குள் அறிவியல் உண்மையும் உண்டு. பட்டும்,பட்டு துணிகளும் இயற்கையாகவே நல்ல கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தது. அத்தோடு தீய கதிர்வீச்சுக்களைத் தடுக்கும் வல்லமையும் பட்டிற்கு உண்டு. திருமணத்திற்கு பல தரப்பட்ட மக்கள் அதாவது உறவினர்கள், நண்பர்கள் , அக்கம்
 

திருமணத்திற்கு  பட்டு சேலை அணிவது ஏன் ?

மிழ் கலாச்சாரத்தில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விஞ்ஞான ரகசியம் ஒளிந்திருக்கிறது. நம் தமிழ் திருமணங்களில் மணப்பெண், மணமகன் இருவருக்குமே பட்டு உடுத்தி கல்யாணம் செய்விப்பது காலம் காலமாக நடந்து வருகிறது.

பணம் செலவழித்து ஆடம்பரத்தை காட்டுவதற்காக மட்டுமல்ல இதற்குள் அறிவியல் உண்மையும் உண்டு. பட்டும்,பட்டு துணிகளும் இயற்கையாகவே நல்ல கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தது. அத்தோடு தீய கதிர்வீச்சுக்களைத் தடுக்கும் வல்லமையும் பட்டிற்கு உண்டு.

திருமணத்திற்கு பல தரப்பட்ட மக்கள் அதாவது உறவினர்கள், நண்பர்கள் , அக்கம் பக்கத்தார் என ஒருகூட்டமே கூடி விடும். வருபவர்களில் நோய் உள்ளவர்களும் அடங்குவர். அந்த நோய்த் தொற்று பரவாமல் இருக்கவும், திருமணமான புதுமணத் தம்பதியரின் ஆரோக்கியமான வாழ்விற்க்காவும் பட்டு அணிந்து திருமணம் நடத்தப்படுகிறது.

கோவில்களுக்கு செல்லும்போது பட்டு அணிவதும் நல்ல கதிர்வீச்சு அலைகளை நம்மிடையே ஈர்த்துக் கொள்வதற்காகத்தான். திருமண சடங்குகளில் மற்றும் கோவில்களில் ஒலிக்கப்படும் மந்திரங்கள் அனைத்தும் பட்டு இழைகளால் கிரகிக்கப் பட்டு அந்த மின் அதிர்வுகள் உடலில் பரவும் போது நன்மை ஏற்படும்.

ஏழை எளியவர்கள் வெள்ளைத் துணியை மஞ்சளில் தோய்த்து அணியும் போது பட்டு செய்கிற வேலையை மஞ்சள் நூல் செய்து விடும்.

https://www.A1TamilNews.com

From around the web