இந்திய அணிக்கு ஏன் இந்த தோல்வி?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிய இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ளன, ஆனால் இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இந்திய அணி தோற்ற இந்த நாளுடன், அவர்களின் உலகக் கோப்பை உற்சாகம் வற்றி விட்டது. இந்திய அணி ஏன் தோற்றது… கையிலிருந்த வெற்றியை நழுவவிட்டது? இந்திய அணி வீரர்களிடம் நேற்று இருந்த தீவிரமும் உற்சாகமும் இன்று மிஸ்ஸிங். கொஞ்சம் மெத்தனமும் தெரிந்தது. மூன்று முதல் நிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும், பின்னர் வந்தவர்கள் பந்துகளைச் சாப்பிட்டதும் இரண்டாவது காரணம்
 

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிய இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ளன, ஆனால் இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இந்திய அணி தோற்ற இந்த நாளுடன், அவர்களின் உலகக் கோப்பை உற்சாகம் வற்றி விட்டது.

இந்திய அணி ஏன் தோற்றது… கையிலிருந்த வெற்றியை நழுவவிட்டது?

இந்திய அணி வீரர்களிடம் நேற்று இருந்த தீவிரமும் உற்சாகமும் இன்று மிஸ்ஸிங். கொஞ்சம் மெத்தனமும் தெரிந்தது. 

மூன்று முதல் நிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும், பின்னர் வந்தவர்கள் பந்துகளைச் சாப்பிட்டதும் இரண்டாவது காரணம்

குறிப்பாக இந்த தினேஷ் கார்த்திக்… ஆடத் தெரியாதவன் கையில் மட்டையைக் கொடுத்தனுப்பிய மாதிரிதான் இருந்தது. 6 ரன்கள் எடுக்க 25 பந்துகள்… டெஸ்ட் போட்டிகளில் கூட வந்த வேகத்திலேயே 4, 6 என விளாசுகிறார்கள். ஆனால் இவரோ..?

யார் நல்ல ஃபார்மில் ஆடுகிறார்களோ அவர்களை ஆடவிட்டு, எதிர் முனையில் நிலைத்து ஆடுவதுதான் நல்ல தலைமை. ஜடேஜா வெளுத்து வாங்கிய போது, எதிர்முனையில் அவருக்கு தோள் கொடுத்து நின்றார் டோணி. அவரும் பந்துகளை விழுங்கினார் என்றாலும், ஒரு அபார சிக்சருடன் அதைச் சரிசெய்யும் நேரத்தில் ரன் அவுட்.

இந்திய அணி தோற்றது வருத்தமாக இருந்தாலும், லீக் ஆட்டங்களில் அசத்தல் வெற்றிப் பெற்று, மிகப் பெரிய சவால் அணியாக திகழ்ந்த இந்தியாவின் பலவீனங்களை சரியாகப் பயன்படுத்தி விளையாடிய நியூசிலாந்து வென்றது. அதுதான் கிரிக்கெட்.

இனி தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப், கேதர் ஜாதவ் மாதிரி தேவையற்ற லக்கேஜுகளைக் கழட்டி விட்டு, திறமையாளர்களைக் கண்டறிந்து அணியில் சேர்க்க வேண்டும். குறிப்பாக ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து வாய்ப்பு தருவதும் மறுப்பதும், இந்த மாதிரி தோல்விகளைத்தான் தொடர்ந்து பரிசாகத் தரும். உதாரணம் முகமது ஷமி. மிகத் திறமையான பந்து வீச்சாளர். இந்த ஆட்டத்தில் அவர் இருந்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்து 200 ரன்களுக்குள் அடங்கியிருக்கும்.

அண்மையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழுவின் மீது அதிருப்தி கொண்டு விலகிய அம்பத்தி ராயுடு, நல்ல பார்மில் இருந்தும் புறக்கணிக்கப்பட்ட உமேஷ் யாதவ்… இப்படி சரி செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன.

ஒரு அணி எப்போதும் வெற்றியே பெற்றுக் கொண்டிருக்க முடியாதுதான். ஆனால் கையிலிருந்த வெற்றியை மெத்தனத்தால் நழுவ விடுவதுதான் கிரிக்கெட் ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்திய அணியும், ரசிகர்களும் இதிலிருந்து மீண்டு வருவார்கள்!

– முதன்மை ஆசிரியர்

From around the web