தூத்துக்குடி தந்த முத்து பீலா ராஜேஷ்?

கடந்த இரண்டு வாரங்களாக தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது பீலா ராஜேஷ். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர்.பீலா ராஜேஷின் பெயர், தற்போது தமிழ்நாட்டில் ஒரு குடும்பப் பெயர் போலாகி வருகிறது. கொடிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டுக்குள் வந்ததும், தமிழக முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். துறை சார்ந்த செயலாளர்களும் உடன் களத்தில் இறங்கினர். தொற்று நோய் தொடர்பான பிரச்சனை என்பதால் மக்கள்
 

தூத்துக்குடி தந்த முத்து பீலா ராஜேஷ்?டந்த இரண்டு வாரங்களாக தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது பீலா ராஜேஷ். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர்.பீலா ராஜேஷின் பெயர், தற்போது தமிழ்நாட்டில் ஒரு குடும்பப் பெயர் போலாகி வருகிறது.

கொடிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டுக்குள் வந்ததும், தமிழக முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். துறை சார்ந்த செயலாளர்களும் உடன் களத்தில் இறங்கினர். தொற்று நோய் தொடர்பான பிரச்சனை என்பதால் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கண்காணிப்பில் அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செல்லுமிடமெல்லாம் செய்தியாளர்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் பின் தொடர்ந்து செய்திகளை வழங்கி வந்தனர். அமைச்சரும் தொடர்ந்து பேட்டிகள் மூலம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

இந்த பணிகள் அனைத்திலும் உடன் இருந்து கவனித்து வரும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பேற்று தினசரி தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து வரத் தொடங்கியதும் யார் இவர் என்ற கேள்விகள் எல்லோருக்குள்ளும் எழுந்தது.

மிகவும் நேர்த்தியான தகவல்கள், அரசியல் சார்பற்ற தேவையான பதில்கள், இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் என வெகு சீக்கிரமாகவே வெகுஜன மக்களுக்கு பிடித்தமானவராகிப் போனார். இன்னைக்கு என்ன சொன்னார், எத்தனை பேர் குணமடைந்தார்கள், வேறு எங்கு தொற்று பரவியுள்ளது என கொரோனா தொடர்பான அன்றாடத் தகவல்களை அவரிடம் எதிர்ப்பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் என்பவருக்கு ஒரு கட்சி சாயம் இருப்பதை தவிர்க்க முடியாது தான். ஆனால் ஒரு துறைச் செயலாளர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை உணர்ந்து, ஊடகங்களில் பேசும் போது தனி மரியாதை ஏற்படுவதும் இயல்பு தானே!. அதுவும் இன்று மிக முக்கியமானப் பிரச்சனையை முன்னின்று சமாளித்து வருபவர் என்பதால் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

சிலர், பீலா ராஜேஷ் கேரளாவைச் சேர்ந்தவராக இருக்குமோ என்றும் நினைக்கின்றனர். ஆனால், அவர் ஒரு தமிழ்நாட்டுப் பெண்மணி என்பது இப்போது தான் பரவலாகத் தெரிய வந்துள்ளது. பீலா ராஜேஷின் தந்தை எல்.என்.வெங்கடேசன் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே வாழையடி கிராமமாகும். அவருடைய மனைவி ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதியில் 2006ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.

எல்.என்.வெங்கடேசன் – ராணி வெங்கடேசன் தம்பதியினரின் மகள் தான், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக பணியாற்றிவரும் டாக்டர்.பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். தமிழக அரசின் பல பிரிவுகளில் செயலாற்றி வந்தவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றார்.

A1TamilNews.com 

From around the web