வாட்ஸ் அப்பின் அதிரடி அப்டேட் !

குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்அப்பையே பயன்படுத்தி வருகின்றனர். சில நேரம் தேவையில்லாத தகவல்களும் அவ்வப்போது Forward செய்யப்பட்டு நமது வேலை நேரங்களில் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்துகிறது என்பது வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டு. இப்பிரச்னையைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாகப் பலமுறை அனுப்பப்பட்ட அரட்டைகளில் பகிரப்பட்ட செய்திகளை தரம் பிரித்து ஒரு சிறப்பு பகிரப்பட்ட லேபிளை (Special forwarded label) வழங்கியது. அதன்படி ஒற்றை மற்றும்
 

வாட்ஸ் அப்பின் அதிரடி  அப்டேட் !குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்அப்பையே பயன்படுத்தி வருகின்றனர். சில நேரம் தேவையில்லாத தகவல்களும் அவ்வப்போது Forward செய்யப்பட்டு நமது வேலை நேரங்களில் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்துகிறது என்பது வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டு.

இப்பிரச்னையைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாகப் பலமுறை அனுப்பப்பட்ட அரட்டைகளில் பகிரப்பட்ட செய்திகளை தரம் பிரித்து ஒரு சிறப்பு பகிரப்பட்ட லேபிளை (Special forwarded label) வழங்கியது.

அதன்படி ஒற்றை மற்றும் இரட்டை அம்புக்குறிகளால் செய்திகளை தரம் பிரிக்கும். செய்தியின் முகப்பிலேயே வரும். இந்த அம்புக் குறியீடு மூலம், செய்தியானது அனுப்பும் நபரால் மட்டும் உருவாக்கப்பட்டதா, அல்லது forward செய்யப்பட்டதா? என்பதை பார்த்தவுடன் கண்டறியும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே செய்தி 5 பேர்களுக்கு மேல் அனுப்பப்பட்டால் அப்போது இரட்டை அம்பு ஐகானுடன் Forwarded என்ற குறிப்புடன் இருக்கும். Forwarded குறிப்புடன் ஒற்றை அம்புக்குறி இருப்பின் செய்தி ஐந்து முறைக்கு குறைவாகப் பகிரப்பட்டது என்று பொருள். தற்போது நாம் ஒரு செய்தியை Forward செய்யும்போது, ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள தேர்வு செய்ய முடியும்.

ஆனால் Copy & Paste செய்கையில் ஒற்றை மற்றும் இரட்டை அம்புக்குறிகள் வராது. இதனைத் தடுக்க “Search the web” என்னும் புதியதொரு Update ஒன்றை வழங்கியுள்ளது. இதன்படி செய்தியை இருமுறை சரிபார்க்க எளிய வழியை வாட்ஸ் அப் வழங்குகிறது.

குறிப்பிட்ட வாட்ஸ் அப் உரையாடலில் உள்ள Search ஐ கிளிக் செய்ய செய்தியை Browser வழியே குறிப்பிட்ட இணையதளத்துக்கு அழைத்துச் செல்லும். அங்கு இந்தச் செய்தி உண்மையா, பொய்யா? என உடனடியாக நாம் அறிந்துகொள்ள முடியும். மேலும் செய்தியின் முடிவுகள் மற்றும் அனுப்பியவர் பெற்ற செய்திகளின் உள்ளடக்கத்தைப் பற்றிய பிற தகவல்களின் ஆதாரங்களைக் கண்டறியவும் முடியும்.

செய்தியை சரியாகக் கவனிக்காமல் அல்லது வதந்தி பரப்பும் நோக்குடன் அனுப்பும்போது அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை, செய்தி பெறக்கூடிய நபர் உடனே அறிந்துகொள்ள இந்த Search the Web வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆண்ட்ராய்டு, iOS மற்றும் வாட்ஸ் அப் வெப்பின் மூலம் இவ்வசதியை பெற முடியும்.

தற்போது பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்ஸிகோ, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டும் இந்த வாரத் துவக்கம் முதல் “Search the Web” வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இவ்வசதி படிப்படியாக பொது பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web