மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் நன்மை தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள்
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் நன்மை தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. சில கடன்கள் கவலையைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 15, 20

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்  
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web