பாதுகாப்புக்காக பாதாள அறைக்குச் சென்றாரா அதிபர் ட்ரம்ப்?

மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வெளியேயும் ஃப்ளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப்-ன் ட்வீட் மேலும் பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது. போராட்டம் என்ற பெயரில் கொள்ளை சம்பவங்கள் நடந்தால் துப்பாக்கிச் சூடு நடக்கும் என்பதை குறிப்பிடும் வகையில் “when the looting starts, the shooting starts” என்று ட்விட்டரில் கூறியிருந்தார். வெள்ளிக்கிழமை
 

பாதுகாப்புக்காக பாதாள அறைக்குச் சென்றாரா அதிபர் ட்ரம்ப்?மினியாபோலிஸ் நகரில்  ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வெளியேயும் ஃப்ளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப்-ன் ட்வீட் மேலும் பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது. போராட்டம் என்ற பெயரில் கொள்ளை சம்பவங்கள் நடந்தால் துப்பாக்கிச் சூடு நடக்கும் என்பதை குறிப்பிடும் வகையில் “when the looting starts, the shooting starts” என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு பெருந்திரளாக மக்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடிவிட்டனர். பிரச்சனை பெரிதாக வெடித்து விடலாம் என எண்ணிய அதிபரின் பாதுகாவலர்கள், அவரை வெள்ளை மாளிகையில் உள்ள பாதாள அறைக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளது. அவருடன் மனைவி மெலனியா, மகன் பரோன் ஆகியோரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதிபர் ட்ரம்ப்பும் அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 1 மணி நேரம் பாதாள அறையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

A1TamilNews.com

From around the web