உஷார்!ஆன்லைனில் ஆர்டர் செய்யப் போறீங்களா?

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நேரடியாக சென்று பொருள் வாங்குவதைவிட ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதையே விரும்புகின்றனர். அப்படி வாங்கும் போது சில விஷயங்களை கவனித்தல் அவசியம். ஒரு பொருளை ஆன்லைன் வாங்கி அதைப் பரிசோதிக்க விரும்பினால், ‘லோகோ’ சரியான இடத்தில் உள்ளதா என்பதை வேறு சில இணையப் பக்கங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்ளவும். சிலவேளைகளில் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது. இதை விட மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது ஆன்லைன்
 

உஷார்!ஆன்லைனில் ஆர்டர் செய்யப் போறீங்களா?லகம் முழுவதும் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நேரடியாக சென்று பொருள் வாங்குவதைவிட ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதையே விரும்புகின்றனர். அப்படி வாங்கும் போது சில விஷயங்களை கவனித்தல் அவசியம்.

ஒரு பொருளை ஆன்லைன் வாங்கி அதைப் பரிசோதிக்க விரும்பினால், ‘லோகோ’ சரியான இடத்தில் உள்ளதா என்பதை வேறு சில இணையப் பக்கங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்ளவும். சிலவேளைகளில் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

இதை விட மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது ஆன்லைன் ஷாப்பிங்கில் கேஷ் ஆன் டெலிவரி வசதியைப் பயன்படுத்துவதே மிகவும் பாதுகாப்பானது. ஆர்டர் செய்த பொருள்கள் அனைத்தையும் சரிபார்த்த பின்னர் பணம் செலுத்துவதே சரியான முறை.

இணையதளத்தில் ஆர்டர் செய்த உடன் மெயில் முகவரிக்கோ, மொபைலுக்கோ தகவல் அனுப்பப்படும். அந்த தகவலைப் பொருள் கைக்கு வரும்வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டியதும் அவசியம். விலை உயர்ந்த மின்சாதன பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முன் துறை சார்ந்தவர்களிடம் விசாரித்தபின் வாங்குவது நல்லது.

பொருட்களை ஆர்டர் செய்யும்போது “assured” முத்திரையை உறுதி செய்துகொள்ளவும். ஆன்லைனில் வாங்கிய மின்சாதன பொருள்களை 15 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம்.பதிவு செய்த நொடியிலிருந்தே அந்த கால அவகாசம் தொடங்கிவிடும்.பொருள் கைக்கு வரும் நாள் கிடையாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

A1TamilNews.com

From around the web