தாய் மண்ணே வணக்கம்! அசத்தும் அமெரிக்க தமிழ்ப் பெண் வயலின் ஸ்ரீ!!

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் படித்துவரும் தமிழ்ப்பெண் வயலின் ஸ்ரீ, ஒவ்வொரு வாரமும் தமிழ், இந்திய மற்றும் பிரபல பாடல்களை மேற்கத்திய வயலினில் இசைத்து ஆல்பமாக வெளியிட்டு வருகிறார். இந்தியாவின் 74 சுதந்திர தினத்தை முன்னிட்டு கவியரசு வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிய தாய் மண்ணே வணக்கம் பாடலை மேற்கத்திய வயலினில் இசைத்துள்ளார் வயலின் ஸ்ரீ என்ற ஸ்ரீநிதி மணிவாசகம் உடுமலைப் பேட்டைக்கு அருகிலுள்ள அந்தியூரைப் பூர்விகமாகக் கொண்டவர், கடந்த ஐந்தாண்டுகளாக மேற்கத்திய இசை பயின்று வருகின்றார். மேற்கத்திய
 

தாய் மண்ணே வணக்கம்! அசத்தும் அமெரிக்க தமிழ்ப் பெண் வயலின் ஸ்ரீ!!அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் படித்துவரும் தமிழ்ப்பெண் வயலின் ஸ்ரீ, ஒவ்வொரு வாரமும் தமிழ், இந்திய மற்றும் பிரபல பாடல்களை மேற்கத்திய வயலினில் இசைத்து ஆல்பமாக வெளியிட்டு வருகிறார்.

இந்தியாவின் 74  சுதந்திர தினத்தை முன்னிட்டு கவியரசு வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிய தாய் மண்ணே வணக்கம் பாடலை மேற்கத்திய வயலினில் இசைத்துள்ளார் 

வயலின் ஸ்ரீ என்ற ஸ்ரீநிதி மணிவாசகம் உடுமலைப் பேட்டைக்கு அருகிலுள்ள அந்தியூரைப் பூர்விகமாகக் கொண்டவர், கடந்த ஐந்தாண்டுகளாக மேற்கத்திய இசை பயின்று வருகின்றார். 

மேற்கத்திய இசையில் பயின்ற நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் மற்றும் இந்திய மொழிகளின் திரையிசைப் பாடல்களின் மெட்டுகளை, சொந்தமாக மேற்கத்திய இசைக் குறிப்பாக்கி அதனை வயலின் இசையாக இசைத்து வருகிறார்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், பூர்விகத் தொடர்புடன் இந்திய சுதந்திர தினத்திற்க்காக ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் மண்ணே வணக்கம் பாடலை தேர்ந்தெடுத்து, அதற்கு இசைக்குறிப்பு எழுதி வயலினில் வாசித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

 

From around the web