விஜய்யுடன் மோதுகிறார் விஜய் சேதுபதி

சென்னை: விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளி வருகிறது. இந்தப் படத்தின் படப்படிப்பு நிறைவு பெற்றுள்ளதை அடுத்து, விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ம் தேதி தொடங்க உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தளபதி 64 என்று தற்காலிகமாக குறிப்பிடுகிறார்கள். விஜய்யுடன் மோதும் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்
 

சென்னை: விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளி வருகிறது. இந்தப் படத்தின் படப்படிப்பு நிறைவு பெற்றுள்ளதை அடுத்து, விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ம் தேதி தொடங்க உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தளபதி 64 என்று தற்காலிகமாக குறிப்பிடுகிறார்கள். விஜய்யுடன் மோதும் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவித்துள்ளார்கள்.

விஜய்யுடன் நடிப்பதற்காக, நடித்துக் கொண்டிருந்த துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தளபதி 64 படத்தை எக்ஸ்பி நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.  மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web