வேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்!

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையைத் தொடர்ந்து, நெய்வேலி படப்படிப்பின் போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கெத்து காட்டினார் விஜய். விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே பாஜக அரசு இந்த சோதனையை திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள் என்று அரசியல் பிரச்சனையாக ஒருபுறம் உருவெடுக்க, இந்துத்துவா ஆதரவாளர்கள் வேறு ஒரு கோணத்தில் அவதூறு பரப்பி வருவதாகத் தெரிய வந்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த குறுந்த்தகவலில் கூறப்பட்டுள்ளதாவது “சத்தியபாமா பல்கலைக்கழகத்தை நிறுவிய ஜேப்பியாரின் மகள் ரெஜினா, கிறித்துவ மதத்தை
 

வேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்!மீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையைத் தொடர்ந்து, நெய்வேலி படப்படிப்பின் போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கெத்து காட்டினார் விஜய்.

விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே பாஜக அரசு இந்த சோதனையை திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள் என்று அரசியல் பிரச்சனையாக ஒருபுறம் உருவெடுக்க, இந்துத்துவா ஆதரவாளர்கள் வேறு ஒரு கோணத்தில் அவதூறு பரப்பி வருவதாகத் தெரிய வந்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த குறுந்த்தகவலில் கூறப்பட்டுள்ளதாவது

“சத்தியபாமா பல்கலைக்கழகத்தை நிறுவிய ஜேப்பியாரின் மகள் ரெஜினா, கிறித்துவ மதத்தை பரப்புவதற்காக, மதமாற்றம் செய்து வருவதாகவும், கிறித்தவ மத குருமார்கள் உதவியுடன் விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆரத்தி உள்ளிட்ட பல நடிகர்களையும் பிரமுகர்களையும் ரெஜினா மதமாற்றம் செய்துள்ளார்.

இந்த நடிகர்கள் திரைத்துறையில் உள்ள மற்றவர்களை மதமாற்றம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளார். மோடி அமித்ஷாவின் கெடுபிடியான நடவடிக்கைகளால், இதற்கான நிதியுதவி கல்வி நிறுவனங்கள் மூலம் வருகிறது. பிகில் படத் தயாரிப்புக்கான மொத்த பணத்தையும் ஜேப்பியாரின் மகள் தான் கொடுத்தார். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயரில் படம் வெளிவந்தது. அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் பிகில் படத்தின்  மொத்த கருப்புப் பணமும் விஜய்க்கு கொடுக்கப்பட்டது. அன்புச் செழியன் ரெஜினாவுக்கு பணப்பரிவர்த்தனை செய்துள்ளார். 

ஒரு வருடமாக கண்காணித்த வருமான வரித்துறை, பிகில் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அனைத்து ஆதாரங்களையும் உறுதி செய்தது. அதன் பிறகே ஜேப்பியார் ட்ரஸ்ட், எஸ்.ஆர்.எம்., லயோலா ட்ரஸ்ட் மற்றும் சில கிறித்தவ கல்வி அமைப்புகள் மீது சோதனை நடத்தினார்கள். இது பனிமலையின் ஒரு நுனி தான். இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன,” என்று கூறப்பட்டுள்ளது.

இது நடிகர் விஜய் சேதுபதி கவனத்திற்கும் வந்துள்ளது. அவர் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் கூறப்பட்ட அந்த குறுந்தகவலின் ஸ்கீரின்ஷாட்டை தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பகிர்ந்தவர் அதற்கு தலைப்பாக “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை பட்டவர்த்தனமாக்கியுள்ளார் விஜய் சேதுபதி.

https://www.A1TamilNews.com

From around the web