கொரோனாவுக்கு வெகு விரைவில் தடுப்பூசி! வெற்றி விளிம்பில் இந்திய நிறுவனத்தின் முயற்சி!!

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனம் முக்கியக் கட்டத்தை கடந்துள்ளது. விலங்குகளுக்கான சோதனையில் வெற்றி பெற்றுள்ளதால், மனிதர்கள் மீது சோதனை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. உலக மருந்து நிறுவனங்களும், பல்கலைக் கழக ஆராய்ச்சி மையங்களும் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு சில கண்டுபிடிப்புகள் இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் COVAXINE மருந்தை கண்டுபிடித்துள்ளது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில்
 
கொரோனாவுக்கு வெகு விரைவில் தடுப்பூசி! வெற்றி விளிம்பில் இந்திய நிறுவனத்தின் முயற்சி!!கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனம் முக்கியக் கட்டத்தை கடந்துள்ளது. விலங்குகளுக்கான சோதனையில் வெற்றி பெற்றுள்ளதால், மனிதர்கள் மீது சோதனை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
 
உலக மருந்து நிறுவனங்களும், பல்கலைக் கழக ஆராய்ச்சி மையங்களும் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு சில கண்டுபிடிப்புகள் இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது.
 
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த  பாரத்  பயோடெக் நிறுவனம் COVAXINE   மருந்தை கண்டுபிடித்துள்ளது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெற்றதால் மனிதர்களிடம் சோதனை நடத்துவதற்கு  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.
 

ஜூலை  மாதத்தில் இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது ஐசிஎம் ஆர் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து  பாரத் பயோடெக்  நிறுவனம்  COVAXINE மருந்தை கண்டறிந்துள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முக்கிய பங்களிக்கும் என நம்பலாம்.

 

From around the web