ஒரே நேரத்தில் 50 பேர் வரை வீடியோ கால் பேச முடியும்! பேஸ்புக் அப்டேட்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் சமூக வலைதளங்களை முன்னிலும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஜூம், ஸ்கைப் போன்ற வீடியோ செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அதிகம் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜூம் செயலிக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனம் தனது புதிய மெசஞ்சர் ரூம்ஸ் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பில் பேஸ்புக்
 

ஒரே நேரத்தில் 50 பேர் வரை வீடியோ கால் பேச முடியும்! பேஸ்புக் அப்டேட்!கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் சமூக வலைதளங்களை முன்னிலும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் ஜூம், ஸ்கைப் போன்ற வீடியோ செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அதிகம் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜூம் செயலிக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனம் தனது புதிய மெசஞ்சர் ரூம்ஸ் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பில் பேஸ்புக் பயனர்கள் அல்லது மெசஞ்சர் ஆப் மூலம் 50 பேர் வரை வீடியோ காலில் அழைக்க முடியும். பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களைக் கூட வீடியோ காலில் இணைத்துக் கொள்ள முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்துடன் மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் பிரைவசி பாதுகாப்பிற்கு முன்னுரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த சேவையைப் பெற புதிதாக எந்த ஆப்பையும் டவுன்லோடு செய்யத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web