மும்பை திரும்பிய 1 லட்சத்து 91 ஆயிரம் உ.பி. தொழிலாளர்கள்! யோகி ஆதித்யநாத் ஐ நம்பத் தயாராக இல்லை?

புலம் திரும்பிய உ.பி. தொழிலாளர்களுக்கு சிறப்புத் திட்டம், பொருளாதார மண்டலம், தொழிலாளர்கள் திறன் ஆய்வு என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தது. உ.பி. முதல்வரைப் பார்த்து தமிழ்நாடு விழித்துக் கொள்ள வேண்டும் என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்க்கு டேக் செய்து ட்வீட் செய்திருந்தார். ஆனால், நிலைமை தலைகீழாகத் தெரிகிறது. மும்பை மற்றும் மஹாராஷ்ட்ராவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் ஜூன் மாதம் 1 முதல் 24ம் தேதி வரை மட்டும் 1
 

மும்பை திரும்பிய 1 லட்சத்து 91 ஆயிரம் உ.பி. தொழிலாளர்கள்! யோகி ஆதித்யநாத் ஐ நம்பத் தயாராக இல்லை?புலம் திரும்பிய உ.பி. தொழிலாளர்களுக்கு சிறப்புத் திட்டம், பொருளாதார மண்டலம், தொழிலாளர்கள் திறன் ஆய்வு என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தது. உ.பி. முதல்வரைப் பார்த்து தமிழ்நாடு விழித்துக் கொள்ள வேண்டும் என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்க்கு டேக் செய்து ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், நிலைமை தலைகீழாகத் தெரிகிறது. மும்பை மற்றும் மஹாராஷ்ட்ராவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் ஜூன் மாதம் 1 முதல் 24ம் தேதி வரை மட்டும் 1 லட்சத்து 91 ஆயிரம் பேர் உ.பி.யிலிருந்து மும்பை பெருநகர் பகுதிக்கு திரும்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 200 ரூபாய் கூலி கிடைக்கிறது, ஆனால் மும்பையில் 900 ரூபாய் தினசரி கூலி கிடைப்பதால், கொரோனா நெருக்கடி காலக்கட்டத்திலும் மும்பைக்கு தினசரி தொழிலாளர்கள் திரும்பி வந்த வண்ணம் உள்ளார்கள்.

நடந்தும், லாரிகளிலும் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் ரயில்களில் தற்போது மும்பை திரும்பி வருகிறார்கள். ஊருக்குப் போனதும் இனி மும்பைப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யாத அளவுக்கு புலம்பியவர்கள்  கூட, பெண்களின் பிரசவ வைராக்கியம் என்று சொல்வது போல், எல்லாவற்றையும் மறந்து விட்டு மும்பை கிளம்புகிறார்கள்.

அவ்வளவு தாங்க உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் மீது உ.பி. தொழிலாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை!

A1TamilNews.com

From around the web