உ.பி. பையாக்களை இனி ஜஸ்ட் லைக் தட் வேலைக்கு கூப்பிட முடியாது! முதலமைச்சர் அதிரடி உத்தரவு!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சில மாநிலங்கள் அக்கறையுடன் நடத்துவதில்லை. இனி உ.பி. மாநிலத்தவரை பணியமர்த்தும் மாநிலம் உ.பி. அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். எங்கள் மாநில தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு நாங்களே பொறுப்பேற்க உள்ளோம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உ.பி. க்கு திரும்பியதால் கொரோனா தோற்று அதிகம் ஆகி உள்ளது. சாதாரணமாக ஒருவர் கொரோனாவில் இருந்து மீள 20 நாள் ஆனால், புலம் திரும்பிய தொழிலாளர்கள் 7 நாட்களில் குணமாகி விடுவார்கள். புலம்பெயர் தொழிலாளர்
 
உ.பி. பையாக்களை இனி ஜஸ்ட் லைக் தட் வேலைக்கு கூப்பிட முடியாது! முதலமைச்சர் அதிரடி உத்தரவு!!புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சில மாநிலங்கள் அக்கறையுடன் நடத்துவதில்லை. இனி உ.பி. மாநிலத்தவரை பணியமர்த்தும் மாநிலம் உ.பி. அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். எங்கள் மாநில தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு நாங்களே பொறுப்பேற்க உள்ளோம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
 
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உ.பி. க்கு திரும்பியதால் கொரோனா தோற்று அதிகம் ஆகி உள்ளது. சாதாரணமாக ஒருவர் கொரோனாவில் இருந்து மீள  20  நாள் ஆனால், புலம் திரும்பிய தொழிலாளர்கள் 7  நாட்களில் குணமாகி விடுவார்கள். புலம்பெயர் தொழிலாளர் வாரியம் அமைக்கப்படும்.அவர்களுக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 
25  லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உ.பி. திரும்பி உள்ளதாக  அம்மாநில  கூடுதல் தலைமை செயலாளர்  அவனிஷ் அவஸ்தி கூறுகிறார். புலம் திரும்பிய உத்தரபிரதேச மாநிலத் தொழிலாளர்களின்  பணித்திறன் பற்றிய புள்ளிவிவரங்களை  விறுவிறு என்று தயாரித்து  அரசுவெளியிட்டுள்ளது.,,

பெயிண்டர்  26041, மரத்தச்சர் 16,064 , டிரைவர் 9,052 ,  எலெக்ட்ரிஷியன் 4,980, செக்யூரிட்டி 3,364   ஆட்டோ மெக்கானிக் 1,557,  பர்னிச்சர் 2,234 ,  ரெடிமேட் ஆடை தயாரிப்பு 12,103   என பட்டியல் வெளியிட்டுள்ளது உ.பி. அரசு.

பங்களா தேசம், வியட்நாம் நாடுகள் போல  உபி.யை ரெடிமேட் ஆடை சந்தை ஆக்குவோம் என அம்மாநில  உள்துறை அதிகாரி அடித்து கூறுகிறார். மாநிலத்திற்கு திரும்பி வந்துள்ள தொழிலாளர்களின் திறன்களை வைத்து புதிய தொழில்கள் தொடங்க ஆர்வம் காட்டும் உத்தரப் பிரதேச மாநில அரசின் நடவடிக்கை வரவேற்கத் தக்கதே!
– வி.எச்.கே. ஹரிஹரன்

From around the web