எடை குறைவான குழந்தைகள் ஊத்தப்பம் சாப்பிட வேண்டும் – ஐநா அறிவுரை

இந்தியா: எடை குறைவான குழந்தைகள் ஊத்தப்பம் சாப்பிட வேண்டும் என ஐ.நா.வுக்கான குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எடை குறைபாடு பிரச்னைகளை சரி செய்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஊத்தப்பம், உருளைக்கிழங்கு, பன்னீர் ரோல் உள்ளிட்ட உணவுகளை வழங்க வேண்டும் என ஆரோக்கிய உணவுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 20 ரூபாய் செலவில், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட 33 சதவிகித
 

எடை குறைவான குழந்தைகள் ஊத்தப்பம் சாப்பிட வேண்டும் – ஐநா அறிவுரைஇந்தியா: எடை குறைவான குழந்தைகள் ஊத்தப்பம் சாப்பிட வேண்டும் என ஐ.நா.வுக்கான குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எடை குறைபாடு பிரச்னைகளை சரி செய்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஊத்தப்பம், உருளைக்கிழங்கு, பன்னீர் ரோல் உள்ளிட்ட உணவுகளை வழங்க வேண்டும் என ஆரோக்கிய உணவுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 20 ரூபாய் செலவில், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட 3‌3 சதவிகித குழந்தைகள் எடை குறைபாட்டுடன் இருப்பதும், 17 விழுக்காட்டினர் ஆரோக்கியமின்றியும் இருப்பதாக, ஊட்டச்சத்து கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வில் தெரியவந்தது. இந்த நிலையில், எடை பிரச்னை உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதற்கான உணவுகள் எவை என்ற பட்டியலை யுனிசெப் ‌அமைப்பு வெளியிட்டுள்ளது.

28 ‌பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தில், ஆரோக்கிய உணவுகள் மற்றும் அதன் விலை குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. எடை அதிகமுள்ள குழந்தைகளுக்கு, முளைகட்டிய பயறு, அவல் போன்றவற்றை யுனிசெப் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web