உங்கள் குழந்தை இந்த லிஸ்ட்டில் வருகிறதா? பெற்றோர்களே எச்சரிக்கை!!

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வளர்ச்சி குன்றியவர்களாகவோ அல்லது உடல் பருமனுடனோ இருக்கின்றனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலவரம் தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு பிறகு யுனிசெப் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வளர்ச்சி குன்றியவர்களாகவோ அல்லது அதற்கு நேர்மாறாக உடல் பருமனுடனோ இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை நாடுகள் மற்றும் நடுத்தர
 

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வளர்ச்சி குன்றியவர்களாகவோ அல்லது உடல் பருமனுடனோ இருக்கின்றனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலவரம் தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு பிறகு யுனிசெப் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வளர்ச்சி குன்றியவர்களாகவோ அல்லது அதற்கு நேர்மாறாக உடல் பருமனுடனோ இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை நாடுகள் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் இந்த பிரச்னை அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வயது அல்லது அதற்கும் குறைவான வயது கொண்ட 149 மில்லியன் குழந்தைகள் வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி அடையவில்லை இது அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கிறது என அந்த அறிக்கை எச்சரிக்கிறது. உலகில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டதட்ட பாதி பேருக்கு போதிய ஊட்டச்சத்துடன் கூடிய உணவு கிடைப்பதில்லை.

இத்தனை ஆண்டுகளாக ஊட்டச்சத்து குறைபாடு ஒரு பிரச்னையாக இருந்த நிலையில் தற்போது குழந்தைகளிடையே காணப்படும் உடல்பருமன் பிரச்னையும் பூதாகரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள 800 மில்லியன் மக்கள் எப்போதுமே பசியில் உள்ளனர், அதே வேளையில் 2 பில்லியன் மக்கள் நீரிழிவு, இதய நோய் உள்ளிட்டவற்றுக்கு வித்திடும் உணவுகளை அதிகமாக உண்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை.

ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க எந்த அளவு கவனம் செலுத்துகிறோமோ அதே அளவு உடல் பருமனை போக்குவதிலும் செலுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் உடல் பருமன் பிரச்னை காணப்படுவதற்கு ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகளே காரணம் என கூறப்பட்டுள்ளது.

பொதுவாக கரு உருவானதில் இருந்து முதல் ஆயிரம் நாட்களுக்கு குழந்தைகளுக்கு கிடைக்கும் உணவு தான் அவர்களின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என கூறியுள்ள யுனிசெப் பெற்றோர் இதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் ஆரோக்கியமான குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம் என்றும் தெரிவித்துள்ளது.

-வணக்கம் இந்தியா

From around the web