கொரோனாவுடன் வாழ்ந்து விடலாம் போலிருக்கு! அடிமை அரசு அவ்வளவு கொடுமையாக உள்ளது! உதயநிதி ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு!!

கொரோனாவுடன்கூட வாழ்ந்துவிடலாம் போலிருக்கிறது, அடிமை அரசில் வாழ்வது அவ்வளவு கடுமையாக, கொடுமையாக உள்ளது என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் போலீஸ் காவலில் கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேரிடையாகச் சென்று ஆறுதல் தெரிவித்து வந்த உதயநிதி ஸ்டாலின் அந்தப் பயணம் குறித்து 4 பக்கத்திற்கு விரிவான தகவல்களை கடிதமாக பகிர்ந்துள்ளார். அதை ட்விட்டரில் பகிரும் போது தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, கொரோனாவை விட கொடியது என்று கூறியுள்ளார். மேலும்,
 

கொரோனாவுடன் வாழ்ந்து விடலாம் போலிருக்கு! அடிமை அரசு அவ்வளவு கொடுமையாக உள்ளது! உதயநிதி ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு!!கொரோனாவுடன்கூட வாழ்ந்துவிடலாம் போலிருக்கிறது, அடிமை அரசில் வாழ்வது அவ்வளவு கடுமையாக, கொடுமையாக உள்ளது என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் போலீஸ் காவலில் கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேரிடையாகச் சென்று ஆறுதல் தெரிவித்து வந்த உதயநிதி ஸ்டாலின் அந்தப் பயணம் குறித்து 4 பக்கத்திற்கு விரிவான தகவல்களை கடிதமாக பகிர்ந்துள்ளார். அதை ட்விட்டரில்  பகிரும் போது தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, கொரோனாவை விட கொடியது என்று கூறியுள்ளார்.

மேலும், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலைகளே இதற்கு சான்று. பாதிக்கப்பட்டவர்களின் பின்னால் கழகம் என்றும் நிற்கும் என்பதற்கும் இவ்வழக்கே சான்று. நீதிக்காக துணை நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றி!,” என்றும் கூறியுள்ளார்.

உதயநிதி எழுதிய கடிதத்தில் பென்னிக்ஸ் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக தெரியவந்ததுள்ளதாகவும், ஆனாலும் இந்த வழக்கில் திமுக இறுதி வரையிலும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின் மீதுள்ள சந்தேகங்களுக்கு கேள்வி எழுப்பியதும், விடை தேடுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி. 

A1TamilNews.com

From around the web