ரஜினியின் செல்வாக்கு என்ன? ஜெயலலிதாவுக்கு சுட்டிக் காட்டிய அண்ணாமலை!!

1991ல் முதல் தடவையாக ஜெயலலிதா முதல்வரானதும் அவருடைய போயஸ் இல்லத்துக்கே நேரில் சென்று வாழ்த்தி சினிமா எனும் தாய்வீட்டிலிருந்து நீங்கள் முதல்வரானது மிகப்பெரிய விசயம். எப்போதும் என் ஆதரவு உங்களுக்கே என்று கை குலுக்கி வந்தார் ரஜினி. ஆனாலும் ஜெவுக்கு பிடிமானம் வரவில்லை.காவிரி உண்ணாவிரத மேடைக்கு நேரில் வந்த ரஜினியை அதிமுக தொண்டர்களே விண்ணதிர வரவேற்ற நிகழ்வும் நடந்தது. ரஜினியின் செல்வாக்கை தட்டி வைக்க நினைக்கிறார் ஜெயலலிதா. ரஜினி மன்றங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.மன்னன் வருகிறது.படமெங்கும் ரஜினி ராஜ்யம்.. சண்டி
 

ரஜினியின் செல்வாக்கு என்ன? ஜெயலலிதாவுக்கு சுட்டிக் காட்டிய அண்ணாமலை!!1991ல் முதல் தடவையாக ஜெயலலிதா முதல்வரானதும் அவருடைய போயஸ் இல்லத்துக்கே நேரில் சென்று வாழ்த்தி சினிமா எனும் தாய்வீட்டிலிருந்து நீங்கள் முதல்வரானது மிகப்பெரிய விசயம். எப்போதும் என் ஆதரவு உங்களுக்கே என்று கை குலுக்கி வந்தார் ரஜினி.

ஆனாலும் ஜெவுக்கு பிடிமானம் வரவில்லை.காவிரி உண்ணாவிரத மேடைக்கு நேரில் வந்த ரஜினியை அதிமுக தொண்டர்களே விண்ணதிர வரவேற்ற நிகழ்வும் நடந்தது. ரஜினியின் செல்வாக்கை தட்டி வைக்க நினைக்கிறார் ஜெயலலிதா. ரஜினி மன்றங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.மன்னன் வருகிறது.படமெங்கும் ரஜினி ராஜ்யம்.. சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ என தெரிந்தோ தெரியாமலோ!

மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரத்தின் மீது அசால்டாக உருவகம் வைக்கப்படுகிறது. ஜெ.யின் கவனிப்பு கண்டிப்பாகிறது. மன்றத்தின் பெரும் புள்ளிகள் காவல் துறையின் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.கடிதங்கள் பறக்கின்றன. ரஜினியோ ஆழ்ந்த அமைதியுடன் படப்பிடிப்பில் பிசி. தலைவர் கண்டிப்பாக பாடம் புகட்டுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு.

அண்ணாமலை என்ற சாதாரண கிராமத்துப் பெயர் படத்தின் டைட்டிலாக அறிவிக்கப்படுகிறது. சுரேஷ் கிருஷ்ணா என்ற சிறிய இயக்குனர். அப்போது தான் ஜெ முடிவெடுக்கிறார். அதிமுகவின் மாநில மாநாடுக்கு தேதி குறிக்கிறார். ஆம், அண்ணாமலை ரிலீஸாகும் அதே தேதி தான்.

மறுநாள் அந்தப் படத்தை பற்றி யாரும் பேசக்கூடாது என்ற வழக்கமான ஜெ.த்தனம் நமது மாநாட்டை பற்றி தான் பேச வேண்டும். அதுவும் ரஜினி மன்றங்கள் எங்கு மிகப்பெரிய வீச்சோடு இயங்குகின்றனவோ அதே மதுரையில் மாநாடு. அதிமுக நிர்வாகிகளுக்கும் தயக்கமே. ஆனால், அதை ஜெவிடம் சொல்ல முடியுமா என்ன?

ஏற்பாடுகள் நடக்கின்றன, அண்ணாமலையும் வளர்கிறது, மாநாட்டுப் பந்தலும் வளர்கிறது. திடீரென ஒரு உத்தரவு!. நான் மதுரை வரும் போது ரஜினியின் பேனர் கட்அவுட், சுவரோவியம், போஸ்டர் எதுவும் என் கண்ணில் தென்படக்கூடாது என்ற உத்தரவு தான் அது. மாநிலத்தின் உச்ச அதிகாரம் நினைத்தால் செய்யக்கூடிய சிறிய செயல் தான்.

அண்ணாமலை ரிலீஸானது. மதுரைக்கு ஜெ. வருகிறார். மாநாடு செல்லும் வழியெங்கும் ரஜினி போஸ்டர், ரஜினி சுவரோவியம், ரஜினி கட்அவுட். ஜெ.வுக்கான வரவேற்புக்கு கொஞ்சமும் குறையாத ரஜினி பட வெளியீடு. ஆடித்தான் போகிறார் ஜெ. மாநாடு செய்திகளை விட அண்ணாமலை செய்திகள் தான் அடுத்த நாள் ஹாட் டாபிக். ரஜினி என்பவர் தமிழக மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கின் அளவை அன்றைய மாநில முதலமைச்சருக்கு சுட்டிக் காட்டிய படம் அண்ணாமலை.

ரஜினியின் செல்வாக்கு என்ன? ஜெயலலிதாவுக்கு சுட்டிக் காட்டிய அண்ணாமலை!!

இன்றோடு அண்ணாமலை வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன..
தமிழ்சினிமாவின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திர அந்தஸ்தை ரஜினிக்கு பெற்றுத்தந்த படம் அதுவே. தன்னை தன் ரசிகனை சீண்டிய அத்தனை அரசியல்வாதிகளுக்கும் பொதுவாக திரையை பார்த்து நான்பாட்டுக்கு என் வேலைய சிவனேனு செஞ்சுட்டு இருக்கேன் என்ன வம்பிழுக்காதிங்க, வம்பிக்குழுத்தா நான் சொல்றதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் என எச்சரிக்கை விட்டிருப்பார்.

ஜெ மட்டுமில்லை வேறு யாரும் அதன் பிறகு ரஜினி படங்களை சீண்டிப் பார்த்ததில்லை இன்று வரை! அடின்னா அப்படி ஒரு அடி! சவால்கள், அரசியல்கள் எல்லாவற்றையும் தாண்டி, இன்று வரை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை தராத ரஜினி படம்.

அன்பு, காதல், அப்பாவித்தனம், கோபம், வீரம், சூழ்ச்சி, சவால், பொறுமை உழைப்பு, பாசம், நட்பு என மனிதத் தன்மைகளின் உச்சபட்ச உணர்வுகள் அத்தனையையும் ரஜினி எனும் பெரும் கலைஞன் அசால்டாக திரைமொழிப் படுத்தியிருப்பார். அந்த வகையில் ரஜினியிச படங்களின் ஒன் ஆப் த உச்ச பச்ச திரைப்படம் அண்ணாமலை.

இந்த 28 ஆண்டுகளில் தமிழக தலைமைகள் அத்தனையிலும் மாற்றங்கள் வந்துவிட்டன.. அரசியலே தலைகீழாக மாறிவிட்டது..ஆனால் ரஜினி எனும் பிம்பமும் அது செலுத்தும் ஆளுமையும் இன்னும் மாறவே இல்லை. ரஜினியிசத்தின் உச்சமாக ரஜினியை தமிழ்நாடெங்கும் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை தாண்டி “தலைவர்” என்ற அந்தஸ்தில் அமரச்செய்த படம் அண்ணாமலை!

உங்களுக்கு எத்தனை வயதாக இருந்தாலும் அண்ணாமலையை ஒரு முறை பாருங்கள்.. யாருடைய ரசிகனானாலும் ரஜினி என்பவர் ஒரு நிமிடமேனும் தலைவராக உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வார்.ஏனென்றால் அவர் தான் ரஜினி!

– ஜெ.ஜெயசீலன்

A1TamilNews.com

From around the web