சிபிஐ க்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னாச்சு? – டிடிவி தினகரன் ஆவேசம்!

சென்னை: பொள்ளாச்சியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு என்னாச்ச்சு என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. பாஜகவும் அதிமுகவும் கூட்டணி வைத்துக் கொண்டதால், இந்த வழக்கில் தாமதம் செய்கிறதா சிபிஐ. தமிழ்நாடு மாநில அரசு, பொள்ளாச்சி
 
சிபிஐ க்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னாச்சு? – டிடிவி தினகரன் ஆவேசம்!சென்னை: பொள்ளாச்சியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு என்னாச்ச்சு என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. பாஜகவும் அதிமுகவும் கூட்டணி வைத்துக் கொண்டதால், இந்த வழக்கில் தாமதம் செய்கிறதா சிபிஐ. 
 
தமிழ்நாடு மாநில அரசு, பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்க வேண்டும். சிபிசிஐடியிலிருந்து சிபிஐ க்கு வழக்கை மாற்றுவதில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா என்று தெளிவுபடுத்த வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக, “பொள்ளாச்சி வழக்கை மாற்றுவது குறித்து சிபிஐ யிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. எனவே சாட்சிகளைப் பாதுகாக்க தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக,” சிபிசிஐடி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
 
– வணக்கம் இந்தியா

From around the web