ராமநாதபுரத்தில் சுனாமி வருமோ?

உப்பூர்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளது. உப்பூரில் இன்று காலை கடல் திடீரென 200 மீட்டருக்கு உள்வாங்கியது. அதனால், அந்தப் பகுதி மீனவர்கள் கடலில் நிறுத்திவைத்திருந்த படகுகள் தரை தட்டின. சில படகுகள் ஒன்றோடு, ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. இதே போல், ராமேஸ்வரம், சங்குமால், பாம்பன், குந்துகால் பகுதிகளிலும் கடல் 30 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கியுள்ளது. திடீரென கடல் உள்வாங்கியுள்ளதால், மீனவர்களும் அந்த பகுதி மக்களும் கவலை அடைந்துள்ளனர். கடல் சீற்றம், உள்வாங்குதல் போன்ற
 

ராமநாதபுரத்தில் சுனாமி வருமோ?

உப்பூர்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளது. உப்பூரில் இன்று காலை கடல் திடீரென 200 மீட்டருக்கு உள்வாங்கியது.

அதனால், அந்தப் பகுதி மீனவர்கள் கடலில் நிறுத்திவைத்திருந்த படகுகள் தரை தட்டின. சில படகுகள் ஒன்றோடு, ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. இதே போல், ராமேஸ்வரம், சங்குமால், பாம்பன், குந்துகால் பகுதிகளிலும் கடல் 30 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கியுள்ளது.

திடீரென கடல் உள்வாங்கியுள்ளதால், மீனவர்களும் அந்த பகுதி மக்களும் கவலை அடைந்துள்ளனர்.

கடல் சீற்றம், உள்வாங்குதல் போன்ற மாற்றங்களால் ஏற்படும் இழப்புக்கு அரசு நிவாரணம் வழங்குவதோடு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுர மாவட்டத்தில் பல இடங்களில் கடல் உள்வாங்கியுள்ளதால், சுனாமி வருமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web