இந்தியா – சீனா பேச்சு வார்த்தைக்கு உதவத் தயார்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் !!

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டு பகுதியில் சீனா ராணுவத்தைக் குவித்து வரும் வேளையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. இந்தியாவிலிருந்து சீனர்கள் வெளியேறுவதற்கு அறிவிப்பு செய்துள்ள சீனா, போருக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. முந்தைய ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும் கிழக்கு எல்லையில் சீனாவும் போருக்குத் தயாராகி வருவது இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்திய வீரர்களும் தயாராக இருக்கும் நிலையில், போர்
 

இந்தியா – சீனா பேச்சு வார்த்தைக்கு உதவத் தயார்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் !!டாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சர்வதேச  எல்லைக்கோட்டு பகுதியில் சீனா ராணுவத்தைக் குவித்து வரும் வேளையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.

இந்தியாவிலிருந்து சீனர்கள் வெளியேறுவதற்கு அறிவிப்பு செய்துள்ள சீனா, போருக்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. முந்தைய ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும் கிழக்கு எல்லையில் சீனாவும் போருக்குத் தயாராகி வருவது இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்திய வீரர்களும் தயாராக இருக்கும் நிலையில், போர் மேகம் மூண்டுள்ளதாகவே கணிக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் ஒரு பக்கம் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டுள்ள நிலையில், சீனாவின் இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணியும் தெரியவில்லை.

சமீபத்தில் தான் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டிவிட்டுச் சென்ற சீன அதிபரின் நடவடிக்கைகள் குழப்பம் ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது, 370 சட்டப்பிரிவை நீக்கியது தொடர்பாக பாகிஸ்தானும் சீனாவும் அதிருப்தி தெரிவித்து இருந்த நிலையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீனாவுடன் தொடர்ந்து மோதல் போக்கு கொண்டுள்ள ட்ரம்ப் எப்படி இந்தியா – சீனா சமரசப் பேச்சுவார்த்தைக்கு உதவ முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

A1TamilNews.com

From around the web