ஹெச்1 பி மற்றும் மாணவர்களின் ஓபிடி விசாக்களுக்கு ஆபத்து? அதிபர் ட்ரம்ப்-க்கு குடியரசுக் கட்சியினர் நெருக்கடி!

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கினால் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியடைந்ததை ஒட்டி விமானத்துறை, சுற்றுலாத்துறை, விளையாட்டுத் துறை, கேளிக்கை விடுதிகள், மால்கள் உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் முடங்கி விட்டதால் இந்த துறை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். 60 நாட்களுக்கு புதிதாக க்ரீன்கார்டுகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்க நிதியுதவியுடன் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் திரும்பும் போது உருவாகும் வேலைகள் வெளிநாட்டவருக்குச் செல்லக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவைப் பிறப்பித்தார். புதிய
 

ஹெச்1 பி மற்றும் மாணவர்களின் ஓபிடி விசாக்களுக்கு ஆபத்து? அதிபர் ட்ரம்ப்-க்கு குடியரசுக் கட்சியினர் நெருக்கடி!மெரிக்காவில் கொரோனா ஊரடங்கினால் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியடைந்ததை ஒட்டி விமானத்துறை, சுற்றுலாத்துறை, விளையாட்டுத் துறை, கேளிக்கை விடுதிகள், மால்கள் உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் முடங்கி விட்டதால் இந்த துறை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். 

60 நாட்களுக்கு புதிதாக க்ரீன்கார்டுகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்க நிதியுதவியுடன் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் திரும்பும் போது உருவாகும் வேலைகள் வெளிநாட்டவருக்குச் செல்லக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

புதிய ஹெச்1 விசாக்களை ஒராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும், ஹெச்1 விசாவில் இருப்பவர்களுக்கும் 60 நாட்கள் தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 செனட்டர்கள் இந்த மாத தொடக்கத்தில் கடிதம் எழுதினார்கள். 

தற்போது அமெரிக்க கல்லூரிகளைச் சேர்ந்த குடியரசுக் கட்சியினர் ஹெச்1 விசாவை தடை செய்ய வேண்டும். கல்லூரியில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தரப்படும் ஒபிடி விசாவையும் தடை செய்ய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப்-க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அமெரிக்கர்களே வேலை இல்லாமல் திண்டாடும் போது இருக்கும் குறைந்த வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர்களுடன் பங்கு போட வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

அதிபர் ட்ரம்ப்பும் ஹெச்1 விசா தடை அல்லது குறைப்பு மற்றும் மாணவர்களுக்கான ஓபிடி விசா காலக்குறைப்பு அல்லது தடை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி விட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஹெச்1 விசா ஊழியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் ஆண்டுக்கு 135 ஆயிரம் டாலர்கள் என்று நிர்ணயிக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இவ்வளவு அதிக ஊதியத்திற்கு சிறு நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்த மாட்டார்கள், அதன் மூலம் அமெரிக்கர்களுக்கு அந்த வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

விரைவில் அதிபர் ட்ரம்ப்பிடமிருந்து ஹெச்1 பி மற்றும் ஒபிடி விசாக்களுக்கான கட்டுப்பாடுகள் வரலாம் என்று பரவலாகக் கூறப்படுகிறது.

மேலும் ஹெச்1, எல் 1 விசா சீர்திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு இனிமேல்  “அமெரிக்க கனவு” என்பது எட்டாத உயரத்திற்குப் போய்விடுமோ என்ற கேள்வி எழுகிறது.

A1TamilNews.com

 

From around the web