“லவ் பண்ணுங்க..ஆனால்…” – என்ன சொல்கிறார் த்ரிஷா?

சென்னை: யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வரும் நடிகை த்ரிஷா, சென்னையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், சிறுவர் சிறுமிகளுடன் த்ரிஷா கலந்துரையாடினார். காதலிப்பது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த த்ரிஷா, காதலியுங்கள் தப்பில்லை. ஆனால் 15 வயதில் காதலித்து ஓடிப்போறது சரியில்லை. அதனால் பாதிக்கப்படுவீர்கள். காதலிப்பதற்கு சரியான வயது வேண்டும். அனைத்தையும் புரிந்து கொண்டு செயல்படும், உரிய பக்குவம் இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். அதனால்,
 

“லவ் பண்ணுங்க..ஆனால்…” – என்ன சொல்கிறார் த்ரிஷா?

சென்னை: யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வரும் நடிகை த்ரிஷா, சென்னையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், சிறுவர் சிறுமிகளுடன் த்ரிஷா கலந்துரையாடினார். காதலிப்பது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த த்ரிஷா, காதலியுங்கள் தப்பில்லை. ஆனால் 15 வயதில் காதலித்து ஓடிப்போறது சரியில்லை. அதனால் பாதிக்கப்படுவீர்கள்.

காதலிப்பதற்கு சரியான வயது வேண்டும். அனைத்தையும் புரிந்து கொண்டு செயல்படும், உரிய பக்குவம் இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். அதனால், படிப்பு முடிந்த பிறகு 21 வயதிற்குப் பின், எமோஷனல் மெச்சூரிட்டி வந்த பிறகு லவ் பண்ணுங்க,” என்று கூறியுள்ளார்.

படத்தில் கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்று டூயட் பாடினாலும் நிஜத்தில், காதலித்து திருமணம் செய்து கொள்ள வயதும், பக்குவமும் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார் த்ரிஷா. 

சரியாத்தானே சொல்லியிருக்காங்க!

 

From around the web