டெல்லிக்கு பயணமாகும் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பல இடங்களில் குறையத் தொடங்கியிருந்தாலும் நாட்டின் சில முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20000 பேர். மேலும் தொடர்ந்து கொரோனாத் தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் நோயாளிகளை தனிமைப்படுத்த ரயில்பெட்டிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று டெல்லி அரசு இந்தியன் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் கொரோனா
 

டெல்லிக்கு பயணமாகும்  தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்!ந்தியாவில் கொரோனா பாதிப்பு பல இடங்களில் குறையத் தொடங்கியிருந்தாலும் நாட்டின் சில முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தலைநகர் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20000 பேர். மேலும் தொடர்ந்து கொரோனாத் தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் நோயாளிகளை தனிமைப்படுத்த ரயில்பெட்டிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று டெல்லி அரசு இந்தியன் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள 160 படுக்கைகளுடன் கூடிய 10 பெட்டிகளை அனுப்பி வைத்திருக்கிறது. கொரோனா துவங்கிய நாட்களிலேயே 2 மாதங்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

அந்த வகையில் இந்தியாவிலேயே ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக முதலில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மாநிலங்களில் டெல்லி முதலிடத்தை பிடிக்கிறது.

A1TamilNews.com

From around the web