காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்! விரைவில் சுற்றுலாவுக்கு அனுமதி!!

சுமார் ஓராண்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாவிற்கு மத்திய உள்துறை அனுமதிக்க உள்ளது. துணை நிலை ஆளுநர் நடத்திய உயரதிகாரிகள் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை கடைபிடித்து சுற்றுலாவிற்கு அனுமதி தர முடிவு செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அரசியல் சாசன பிரிவு 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.மற்றும் பிரிவு 35 ஏ காஷ்மீர் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றால் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அம்மாநிலத்தை விட்டு
 

காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்! விரைவில் சுற்றுலாவுக்கு அனுமதி!!சுமார் ஓராண்டுக்கு பிறகு ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாவிற்கு மத்திய உள்துறை அனுமதிக்க உள்ளது.

துணை நிலை ஆளுநர் நடத்திய உயரதிகாரிகள் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை கடைபிடித்து சுற்றுலாவிற்கு அனுமதி தர முடிவு செய்யப் பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அரசியல் சாசன பிரிவு 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.மற்றும் பிரிவு  35 ஏ காஷ்மீர் குடியுரிமை திருத்த சட்டம்  ஆகியவற்றால்  வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

கடந்த மார்ச் முதல் கொரோனா  காரணமாக சுற்றுலாத்துறை மீண்டும் பாதிக்கப்பட்டது. 2019  ஆகஸ்ட் முதல் இதுவரை காஷ்மீர் சுற்றுலாத்துறை  ரூ 10 ஆயிரம்கோடிக்கும் மேலான இழப்பை கண்டுள்ளது என அம்மாநில ஹோட்டல் சங்க தலைவர் முஷ்டாக் அஹமத் சாயா  தெரிவித்துள்ளார். 

இந்த ஒரு துறைக்கே இவ்வளவு இழப்பு என்றால்  அரசுக்கு வருவாய் இழப்பு பல்வேறு இனங்களில் ஏத்தனை கோடி இருக்கும்? தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு பாதிப்பு எத்தனை கோடி இருக்கும்?.

 தேசிய கட்சிகள் ஜம்மு காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்களின்  மனிதவளம், இயற்கைவளம் வளர்ச்சியில் கவனம் செலுத்தி நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்..

– வி.எச்.கே. ஹரிஹரன்

A1TamilNews.com

From around the web