ஆள்மாறாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை!தேர்தல் ஆணையம் கறார்!

தமிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குச்சாவடிகளையும், அங்கு பணியாற்ற இருக்கும் தேர்தல் அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கும் பணியில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 7 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள். இரு வாக்குச்சாவடிகளாக இருந்தால் 8 வாக்குப்பதிவு அலுவலர்களைக் கொண்ட குழு அமர்த்தப்படும். ஒவ்வொரு வாக்குகளும் கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க முக்கியமானதாக கருதப்படுகிறது.வாக்குப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்காக , தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சிறப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஒரு வாக்காளர் தனது
 

ஆள்மாறாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை!தேர்தல் ஆணையம் கறார்!மிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குச்சாவடிகளையும், அங்கு பணியாற்ற இருக்கும் தேர்தல் அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கும் பணியில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 7 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள். இரு வாக்குச்சாவடிகளாக இருந்தால் 8 வாக்குப்பதிவு அலுவலர்களைக் கொண்ட குழு அமர்த்தப்படும்.

ஒவ்வொரு வாக்குகளும் கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க முக்கியமானதாக கருதப்படுகிறது.வாக்குப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்காக , தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சிறப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

ஒரு வாக்காளர் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததும் அவரை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முதலாம் வாக்குப்பதிவு அலுவலர் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாக்காளரின் வார்டு எண், பாகம் எண், வாக்காளர் பட்டியலில் அவரது வரிசை எண் மற்றும் வாக்காளரின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கிய booth slip கொண்டு வரலாம்.

அதற்காக எந்த ஒரு வாக்காளரையும் booth slip எடுத்து வர நிர்பந்திக்க கூடாது.
ஆள் மாறாட்டத்தை தவிர்த்திட வாக்காளர்களிடம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் ஆணவங்களில் ஏதேனும் ஒன்றினை பெற்று சரிபார்த்து வாக்காளரின் அடையாளம் உறுதி செய்யப் படும். மூல ஆவணங்களை (orginal) மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒரு வாக்காளரின் அடையாளத்தை பற்றி ஆட்சேபனை ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை எனில் முதலாம் வாக்குப்பதிவு அலுவலர் தன்வசம் உள்ள வாக்காளர் பட்டியலின் குறியீட்டு நகலில் அந்த வாக்காளரின் பெயருக்கு அடியில் அவர் வாக்களிப்பதற்கு அடையாளமாக பேனாவினால் அடிக்கோடிட வேண்டும்.

வாக்காளரது அடையாளத்தை பற்றி ஆட்சேபனை எழும்போது மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றினைக் கொண்டு அவர் உண்மையான வாக்காளர் என்பதை உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யப்பட்ட உடனேயே வாக்களிக்க அனுமதிக்கப் பட வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web