தப்பா ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்! பெங்களூரில் திரண்ட ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளார்கள்!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வட மாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளா,கர்நாடாக உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் சேர்ந்த பிறகு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பெங்களூரிலிருந்து ஒடிசா திரும்பிச் செல்ல விண்ணப்பித்து இருந்த தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை ஒடிசா மாநில பூரி நகருக்கு ரயில் புறப்படும் என்று மொபைல் போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதை நம்பிய
 

தப்பா ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்! பெங்களூரில் திரண்ட ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளார்கள்!ரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வட மாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளா,கர்நாடாக உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் சேர்ந்த பிறகு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூரிலிருந்து ஒடிசா திரும்பிச் செல்ல விண்ணப்பித்து இருந்த தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை ஒடிசா மாநில பூரி நகருக்கு ரயில் புறப்படும் என்று மொபைல் போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.  இதை நம்பிய  தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் மேலும் பலருக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளனர்.

தப்பா ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்! பெங்களூரில் திரண்ட ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளார்கள்!இந்த தகவல் தவறுதலாக அனுப்பப் பட்டுள்ளதாகப் பின்னர் தெரிய வந்துள்ளது. ஒடிசா மாநிலத்திற்கு எந்த சிறப்பு ரயிலும் சனிக்கிழமை அனுப்பப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் திரண்டுள்ளனர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்றும் கூறப்பட்டிருந்ததால் முண்டியடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

தங்கள் தங்கியிருந்த இருப்பிடத்தை காலி செய்து விட்டு பெங்களூரின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்துள்ள தொழிலாளர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

முதன் முதலில் டெல்லியில் இப்படி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டார்கள், பின்னர் சூரத், மும்பையில் இப்படி நடந்தது. தற்போது பெங்களூரிலும் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் திரண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் மெசேஜ்-க்கு எவ்வளவு சக்தி என்பதையும் காட்டி விட்டது இந்த சம்பவம்!

A1TamilNews.com

நன்றி: தி நியூஸ் மினிட்

From around the web