கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் இதுவரை நலமாக உள்ளனர்!எஸ்.ஆர்.எம். இணை இயக்குநர் அறிவிப்பு!

உலக முழுவதும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டறிய மிகத் தீவிரமாக போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்கான ‘கோவேக்சின்’ என்ற தடுப்பு மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதனை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒப்புதல்அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் கொரோனாவுக்கான கோவேக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனை நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை மருந்தை செலுத்திக் கொண்ட தன்னார்வலர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கண்டறியப்பட்ட
 

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் இதுவரை நலமாக உள்ளனர்!எஸ்.ஆர்.எம். இணை இயக்குநர் அறிவிப்பு!லக முழுவதும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டறிய மிகத் தீவிரமாக போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்கான ‘கோவேக்சின்’ என்ற தடுப்பு மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இதனை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒப்புதல்அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் கொரோனாவுக்கான கோவேக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனை நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை மருந்தை செலுத்திக் கொண்ட தன்னார்வலர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கண்டறியப்பட்ட மருந்தை மனிதர்களிடம் பரிசோதனைசெய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நாடு முழுவதும் 12 ஆராய்ச்சி மையங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் ஒன்று.
இந்த மருந்தை உடலில் செலுத்திக்கொள்ள தானாக முன்வந்திருக்கும் தன்னார்வலர்களுக்கு மருத்து செலுத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை 6 மாதகாலம்வரை நடக்கும்.ஏற்கனவே தடுப்புமருந்து கொடுக்கப்பட்டவர்கள் இதுவரை நலமாக உள்ளனர். அடுத்த 14 நாட்களுக்கு பிறகு தடுப்புமருந்து மீண்டும் செலுத்தப்படும்.

பின்னர், 28 நாட்கள், 42 நாட்கள், 104 நாட்கள், 194 நாட்கள் வரை பரிசோதனை தொடரும். இதன் பிறகே பரிசோதனை முடிவுகள் எடுக்கப்படும் என எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் இணை துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web