திருமணம் (சில திருத்தங்களுடன்) – விமர்சனம்

நடிகர்கள்: உமாபதி, காவ்யா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், சீமா, சுகன்யா ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ் இசை: சித்தார்த் விபின் தயாரிப்பு: பிரேம்நாத் சிதம்பரம் இயக்கம்: சேரன் நாயகன் மகேஷ் (உமாபதி), அரசு அதிகாரி சேரன் தங்கை காவ்யா சுரேஷ், எஃப்எம்-மில் வேலைப் பார்க்கும் உமாபதி இருவருக்கும் காதல். இந்தக் காதலுக்கு இருவீட்டாரது சம்மதத்தையும் பெற்றுவிடுகின்றனர். திருமண தேதியும் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இரு வீட்டாருக்கும் அந்தஸ்து, திருமணச் செலவு போன்றவற்றில் கருத்து மோதல் ஏற்படுகிறது. இது பிரச்னையாகி உரசல்களை
 

திருமணம் (சில திருத்தங்களுடன்) – விமர்சனம்டிகர்கள்: உமாபதி, காவ்யா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், சீமா, சுகன்யா
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு: பிரேம்நாத் சிதம்பரம்
இயக்கம்: சேரன்

நாயகன் மகேஷ் (உமாபதி), அரசு அதிகாரி சேரன் தங்கை காவ்யா சுரேஷ், எஃப்எம்-மில் வேலைப் பார்க்கும் உமாபதி இருவருக்கும் காதல். இந்தக் காதலுக்கு இருவீட்டாரது சம்மதத்தையும் பெற்றுவிடுகின்றனர். திருமண தேதியும் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இரு வீட்டாருக்கும் அந்தஸ்து, திருமணச் செலவு போன்றவற்றில் கருத்து மோதல் ஏற்படுகிறது. இது பிரச்னையாகி உரசல்களை ஏற்படுத்துகிறது. இதை எல்லாம் மீறி நாயகனும் நாயகியும் எப்படி இணைந்தார்கள் என்பது மீதிக் கதை.

எளிமையான கதை. எல்லோருக்குமே தேவையான கருத்துகள்தான். ஆனால் அதைப் பார்த்து ரசிக்கும்படி சுவாரஸ்யமாகத் தருவதில்தான் கோட்டை விட்டிருக்கிறார் சேரன். திருப்பங்கள் என எதுவும் இல்லாத தட்டையான திரைக்கதை. கிட்டத்தட்ட சேரன் ஏற்கெனவே நடித்த பிரிவோம் சந்திப்போம் மாதிரிதான் பல காட்சிகள் உள்ளன. சுவாரஸ்யமற்ற மெகா சீரியல் போல காட்சியமைப்புகள்.

முதல் பாதி முழுக்க நாயகன் நாயகி திருமண ஏற்பாடுகள்தான். கௌரவத்திற்காக கடன் வாங்கி செலவு செய்வது தேவையா… ஒரு திருமணத்தில் என்னென்ன வெட்டி ஆடம்பரங்கள் என்று சேரன் காட்டியிருப்பதெல்லாம் மிடில் க்ளாஸ் மாதவன்களுக்கான பாடம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவே டாகுமென்டரி மாதிரி ஆகிவிடுகிறது. க்ளைமேக்ஸில் அந்தப் பாட்டெல்லாம் தேவையா சேரன்? ரசிகர்கள் அந்தக் கட்டத்தையெல்லாம் கடந்து வந்து ரொம்ப நாளாகிறது.

நாயகன் உமாபதி, நாயகி காவ்யா இருவருமே பாஸ் மார்க் பெற்றுவிடுகிறார்கள், நடிப்பில். நேர்மையான அதிகாரியாக கச்சிதமாக நடித்திருக்கிறார் சேரன். சுகன்யாவின் ஆடம்பர ஆசை Vs தேவைக்கேற்ப செலவழித்தால் போதும் என்ற சேரனின் மனப்பான்மையும் மோதிக் கொள்ளும் இடங்களில் சுவாரஸ்யம் எட்டிப் பார்க்கிறது. தம்பி ராமய்யா, எம்எஸ் பாஸ்கர் பாத்திரங்கள் கதையை நகர்த்த உதவுகின்றன. வழக்கம் போல, ஜெயப்பிரகாஷ் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்.

இந்தப் படத்துக்கு இது போதும் என அளவான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் ராஜேஷ் யாதவ். சித்தார்த் விபினின் இசை, பாடல்கள் பெரி்தாகக் கவரவில்லை.

நல்ல படைப்பாளி சேரனின் மறுவரவை வரவேற்போம், அடுத்த படத்தையாவது இன்னும் சுவாரஸ்யமாகத் தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன்!

மதிப்பீடு: 2.0/5.0

 

From around the web