கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வாய்ப்பில்லை! தமிழக அரசு அறிவிப்பு!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு, தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500யை கடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருந்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை தற்போது திறப்பதற்கு வாய்ப்பில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது
 

கோயம்பேடு மார்க்கெட்டை  திறக்க வாய்ப்பில்லை! தமிழக அரசு அறிவிப்பு!லகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு, தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500யை கடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு காரணமாக இருந்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை தற்போது திறப்பதற்கு வாய்ப்பில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி.எம்.டி.ஏ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சென்னையில் கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பதால் உணவு தானிய சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

பின்னர், இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, கடை உரிமையாளர்கள் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை நாடலாம் என்று தெரிவித்து, வழக்கின் விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

A1TamilNews.com

From around the web