திருப்பதி கோயில் சொத்தில் எங்களுக்கு இன்னும் பங்கு வேணும்! – கேட்கிறது தெலங்கானா

திருப்பதி: ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயில் சொத்தில் தெலங்கானாவுக்கும் பங்கு தரவேண்டும் என்று கூறி சிலுகுரி பாலாஜி வெங்கடேஸ்வரா கோயில் அர்ச்சகர் வழக்குத் தொடர்ந்துள்ளார். கோயில் அர்ச்சகரும், அறங்காவலருமான எம்.பி. சவுந்தர் ராஜன் தொடர்ந்துள்ள வழக்கில், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, துறை ரீதியாக இரண்டு மாநிலத்துக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டு
 

திருப்பதி: ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயில் சொத்தில் தெலங்கானாவுக்கும் பங்கு தரவேண்டும் என்று கூறி சிலுகுரி பாலாஜி வெங்கடேஸ்வரா கோயில் அர்ச்சகர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கோயில் அர்ச்சகரும், அறங்காவலருமான எம்.பி. சவுந்தர் ராஜன் தொடர்ந்துள்ள வழக்கில், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, துறை ரீதியாக இரண்டு மாநிலத்துக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டு தோறும் இரு மாநிலங்களுக்கும் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் 1987ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்த கோயிலுக்குக் கிடைத்த வருமானத்தைக் கணக்கிட்டு திருப்பதி தேவஸ்தானம் தெலங்கானாவுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் வழங்க வேண்டும் என உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஆந்திர உயர் நீதிமன்றம், ஆந்திர, தெலங்கானா அரசுகளும், திருப்பதி தேவஸ்தானமும் இது குறித்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

From around the web