வாட்ஸ் ஆப் பயனாளிகளுக்கு வார்னிங்.. இந்த நம்பரில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க!!

 
Whatsapp

வாட்ஸ் அப்பில் சில எண்களில் இருந்து போன் கால்கள் வந்தால் அதை எடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

Whatsapp

இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் வரும் புதிய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. புகாரின் படி மக்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. அதாவது எத்தியோபிா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிலிருந்து வருகிறது.

இந்த அழைப்புகள் வேறு நாட்டு குறியீட்டிலிருந்து வந்தாலும் அது உண்மையில் அந்த நாட்டிலிருந்து வருவது கிடையாது. உங்களுக்கு தெரியாத எந்த சர்வதேச அழைப்புகளுக்கும் பதில் அளிக்காமல் இருப்பதே சிறந்தது. இது போல் வாட்ஸ் ஆப் அழைப்புகளுக்கான சர்வதேச எண்களை விற்பனை செய்யும் ஏஜென்சிகள் பணியில் உள்ளன. உங்களுக்கு இந்த அழைப்புகள் நீல நிறத்தில் தோன்றும்.

Whatsapp

இந்த காலை அட்டென்ட் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பெற்று பணத்தை திருடும் மோசடியில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். அது போல் பகுதி நேர வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு இந்த கட்டணத்தை செலுத்தினால், ஒரே மாதத்தில் உங்கள் ஊதியத்துடன் இந்த கட்டணமும் திரும்ப செலுத்தப்படும் என்றெல்லாம் சொல்வார்கள். எதையும் நம்பி பணம் செலுத்திவிட்டு ஏமாற வேண்டாம்.

From around the web