இது என்னடா ஆப்பிளுக்கு வந்த சோதனை.. ஸ்மார்ட் வாட்ச்களுக்கு தடை விதித்த அமெரிக்கா!

 
Apple smart watch

ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன், கணினி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென்று ஒரு தனித்தன்மை மற்றும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில், கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான மாசிமோ (Masimo) என்ற நிறுவனத்தின் பல்ஸ் ஆக்சிமெட்ரி சாதனங்களை திருட்டுத்தனமாக அதன் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களில் பயன்படுத்தப்படும் பல்ஸ் ஆக்சிமெட்ரி சாதனங்களை உருவாக்க, ஆப்பிள் மாசிமோ ஊழியர்களை பணியமர்த்துவதாகவும், அதன் தொழில்நுட்பத்தை திருடியதாகவும் மாசிமோ குற்றம் சாட்டியது.

இதன் தொடர்பான, ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததால், ஆப்பிள் வாட்ச் மாடல்களான ஆப்பிள் வாட்ச் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களும் இனி விற்பனைக்கு வெளிவர கூடாது என்றும், இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் மீதான இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

Apple smart watch

அக்டோபரில் சர்வதேச வர்த்தக ஆணையம் (ITC) அதன் ஸ்மார்ட்வாட்ச்களில் மசிமோவின் காப்புரிமைகளை மீறும் சென்சார்கள் இருப்பதைக் கண்டறிந்ததிலிருந்து, மருத்துவ சாதனங்களைத் தயாரிக்கும் மாசிமோ நிறுவனத்துடன் சட்டப்பூர்வ மோதலில் சிக்கியுள்ளது. ஸ்மார்ட்வாட்ச்கள் மீதான இறக்குமதி தடையை இடைநிறுத்துவதற்காக டிசம்பர் 27 அன்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆப்பிள் முறையிட்டது. ஆனால் தற்போது மேல்முறையீட்டில் உள்ள ஐடிசி முடிவை நீதிமன்றம் மாற்றவில்லை.

இதனால், அமெரிக்காவில் உள்ள அதன் சமீபத்திய ஆப்பிள் வாட்ச்களில் இருந்து இரத்த ஆக்ஸிஜனை அளவிடும் அம்சத்தை ஆப்பிள் அகற்றும் என்று அறிவித்துள்ளது. இந்த தகவலை அறிவித்த கையேடு, ஆப்பிள் நிறுவனம் அதன் சமீபத்திய அறிக்கையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 மாடல் ஸ்மார்ட்வாட்ச்கள் வியாழன் அன்று விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியிடப்பட்ட தயாரிப்புகளில் இருந்து ஒரு முக்கிய அம்சத்தை அகற்றுவது மிகவும் அரிதானது. இரத்த ஆக்ஸிஜன் சென்சார் இல்லாததால் சில வாடிக்கையாளர்கள் ஆப்பிள் வாட்ச் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 சாதனங்களை வாங்க தயக்கம்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், ஆப்பிள் தீர்ப்புக்கு இணங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Apple smart watch

அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் வாட்சை குறைந்த இடையூறுகளுடன் அணுகுவதை உறுதி செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு பிறகு, பிளட் ஆக்சிஜன் அம்சம் இல்லாமல் அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 பதிப்பை அறிமுகப்படுத்துகிறது.ஆப்பிள் வாட்ச் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான தயாரிப்பு வகையாகும்.

இது 2023 ஆம் ஆண்டில் அணியக்கூடிய வகையிலிருந்து கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர் லாபத்தை விற்பனை மூலம் எட்டியுள்ளது. இந்த பிரிவில் அதன் ஹெட்ஃபோன்களும் அடங்கும். இருப்பினும், ஸ்மார்ட் வாட்ச்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற்ற பிறகு, பல்வேறு சேனல்கள் வழியாக அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

From around the web