பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி இது ஃபிரீ இல்லை.. வாட்ஸ்அப் அதிரடி அறிவிப்பு

வாட்ஸ்அப் சாட் பேக்அப் (chat backup) செய்ய இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், சமீபத்தில் சேட் பேக் அப் வசதியில் புதிய விதிமுறைகளை அப்டேட் செய்துள்ளது.
அதன் படி, கூகுள் ட்ரைவ்-ல் இனி இலவசமாக ஷேட் பேக் அப் செய்ய முடியாது. அது உங்கள் கூகுள் கணக்கு சேமிப்பகத்துடன் கணக்கிடப்படும். விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிதாக இருக்கலாம்.
ஆப்பிள் பயனர்களுக்கு ஏற்கனவே இந்த வசதி உள்ளது. ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள், டெக்ஸ்ட் மெசேஜ் உடன் மீடியா பைல்ஸ் பேக்அப் செய்யும் பயனர்கள் கூகுள் ஒன் (Google One) சந்தாவைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.
எனினும் இலவசமாக பேக் அப் செய்ய கூகுள் ட்ரைவ்வில் 15ஜிபி ஸ்டோரேஜை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், வாட்ஸ்அப் பயனர்களை மீடியா (புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்) இல்லாமல் குறுஞ்செய்திகளை மட்டுமே பேக் அப் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த மாற்றம் அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.