ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யுள்ள மொட்டா!!

 
Instagram Twitter

ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையமாக கொண்ட புதிய சமூக வலைத்தளத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற சமூக வலைதளங்களைவிட இன்ஸ்டாகிராமிற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. இதனால் புது புது அப்டேட்டுகளை அந்த நிறுவனம் வழங்கிக்கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, உலகளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் பிரபலங்கள், விளையாட்டு, சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை குறிப்பிடும் வகையில் இலவசமாக வழங்கி வந்த ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் செயல்படுத்தியது. இதன் மூலம் மாத சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் ப்ளு டிக் பறிபோனது.

Instagram

இந்த நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக போட்டியாக Text-ஐ மையமாக கொண்ட புதிய சமூகவலைத்தளத்தை மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப கட்ட முயற்சியில் நிபுணர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும், லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த செயலியில் மெசேஜ் செய்யும் அம்சம் இருந்தாலும் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றும் செயலியாகவே இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

Instagram

இந்நிலையில், ட்விட்டர் போன்று செய்திகளைப் பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் இறங்கியுள்ளது. இந்த புதிய செயலி வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் பிரபலமாக உள்ள ட்விட்டருக்கு இணையாக இன்னொரு புதிய செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் பட்சத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web