மெசேஜ் தப்பாயிடுச்சா..? வாட்ஸ்அப்பில் எடிட் வசதி.. மெட்டா கொண்டுவந்த புதிய அப்டேட்..!

 
Whatsapp

வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

whatsapp

அந்த வகையில், தற்போது வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் பயனாளர்கள் எடிட் செய்துக் கொள்ளலாம். அதாவது அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் திருத்திக் கொள்வதற்கு வாட்ஸ் அப் வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதன் மூலம் பயனாளர்கள் எழுத்துப் பிழையையோ அல்லது அனுப்பிய தகவல் வேறு விதமாக புரிந்துக் கொள்ளப்படுவதையோ மாற்றிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இதனை பயன்படுத்தி உள்ளனர். அது வெற்றிகரமாக அமைந்த பட்சத்தில் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Whatsapp

விரைவில் உலகம் முழுவதிலும் இருக்கும் பயனாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அனுப்பப்பட்ட செய்தி, எடிட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் எதிர் பயனாளருக்கு தெரியும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

From around the web