ரூ. 719-க்கு ட்விட்டரில் ப்ளூ டிக்... எலான் மஸ்க் அறிவிப்பு

 
Twitter

இந்தியாவில் ப்ளூ டிக் சேவைக்கு மாதம் ரூ. 719 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த மாதம் 27-ம் தேதி எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ட்விட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் ‘ப்ளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதி படுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

Elon-has-decided-not-to-join-our-board-tweets-Twitter-CEO

இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1,600 வரை(19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனை தொடர்ந்து ட்விட்டர் ‘ப்ளூ டிக்கிற்கு’ இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Twitter-bans-photo-video-private-people

நேற்று முன்தினம் முதல் அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ப்ளூ சேவை, வரும் நாட்களில் இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும், இது துல்லியமாக இருந்தால், முதலில் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படும். 

ட்விட்டர் ப்ளூ டிக் சேவையை தற்போது பணம் கொடுத்து பெறும் வசதி உள்ளதால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தக்கூடும் என்று பலர் கண்டித்துள்ளனர். எனினும், யாராவது ட்விட்டர் இதனை தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் பணத்தை இழக்க நேரிடும் என்றும் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

From around the web