வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்... விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு!

 
WHATSAPP VIDEO CALLING  இனி ஒரே நேரத்தில் 8 பேருடன் பேசலாம்!

புதிய வசதி அறிமுகமான பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்-ஐ அப்டேட் செய்து அதை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

வதந்திகளை பரப்புபவர்களே உஷார்! WhatsApp அதிரடி!!

வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

தற்போது வரை வாட்ஸ் அப்பில் பயனர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை ‘எடிட்’ செய்ய வழி இல்லை. ஒருமுறை குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால், அதனை எடிட் செய்திட முடியாது. மாறாக அதை நீக்க வேண்டிய நிலை தான் இருந்தது . நீண்ட வாக்கியங்களில் குறுஞ்செய்தி அனுப்பும் போது, சிறு வாக்கிய தவறுக்காக மொத்த குறுஞ்செய்தியையும் நீக்க செய்வது பயனர்களுக்கு சிக்கலாக இருந்து வந்தது. 

whatsapp

இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை ‘எடிட்’ செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த வசதி அறிமுகமான பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து அதை பயன்படுத்தி கொள்ளலாம்.

From around the web