அயோத்தியில் முருகன் கோவில் கட்டுவார்களா? பாஜகவுக்கு கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி! 

 
அயோத்தியில் முருகன் கோவில் கட்டுவார்களா? பாஜகவுக்கு கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி!

தமிழக அரசு தடை விதித்த நிலையிலும் வேல் யாத்திரை நடத்தி கைதாகியுள்ளனர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், இல.கணேசன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள். வேல் யாத்திரைக்கு தடை விதித்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது? அறுபடை வீடுகளுக்கு வேல் யாத்திரை என்றால் ஏன் மற்ற ஊர்களுக்குச் செல்கிறீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கு விசாரணைக்கு மீண்டும் வர உள்ளது.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள கொங்கு மண்டலத்தின் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கார்த்திகேய சிவசேனாபதி, பாஜவினர் முருகனுக்கு அயோத்தியில் கோவில் கட்டுவார்களா?  என்று கேள்வி எழுப்பியுள்ளார். முருகன் தமிழ்க்கடவுள், 3 ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக தமிழர்கள் வழிபட்டு வரும் முருகன் பற்றி 80களில் தோன்றிய பாஜகவினர் பாடம் எடுக்க வேண்டாம்.

முடிந்தால், வடகே முருகனுக்கு கோவில் கட்டி வட இந்தியர்களையும் முருகனை வணங்கச் செய்யட்டும். அதை வரவேற்போம் என்றும் கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை முன்னிறுத்தி பாஜகவை வலுப்படுத்த நினைக்கும் திட்டத்திற்கு, செக் வைக்கும் வகையில் திமுக தரப்பில் கார்த்திகேய சிவசேனாபதி கடுமையான களப்பணி ஆற்றி வருகிறார். கொங்கு மண்டலத்தில் உள்ள சமுதாய மக்களுக்கு திமுக ஆட்சியில் கிடைத்த நன்மைகளையும், இட ஒதுக்கீடு, தென்னை வாரியம், இலவச மின்சாரம் உள்ளிட்டவைகளையும் பட்டியலிட்டு மீண்டும் நினைவூட்டியும் வருகிறார். 

A1TamilNews

From around the web