சட்டமன்றத்திற்குப் போவாரா கமல் ஹாசன்? கருத்துக்கணிப்பு சொல்வதென்ன!!

 
சட்டமன்றத்திற்குப் போவாரா கமல் ஹாசன்? கருத்துக்கணிப்பு சொல்வதென்ன!!

ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் கோவை தெற்கு தொகுதியில் இழுபறி என்று தந்தி தொலைக்காட்சி கூறியுள்ளது. 234 தொகுதிகளிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு தொகுதி வாரியாக அறிவித்து வருகிறது தந்தி தொலைக்காட்சி.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து பாஜகவின் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.

கமல் ஹாசனுக்கும் வானதி சீனிவாசனுக்கும் தான் போட்டி என்று கூறப்பட்டு வந்த நிலையில், மயூரா ஜெயக்குமாருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்து போட்டியில் முன்னுக்கு வந்து விட்டார் என்று இந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில் மயூரா ஜெயக்குமாருக்கும் வானதி சீனிவாசனுக்கும் தான் போட்டி என்று கூறப்படுகிறது. திமுக, அதிமுக வாக்குகளை  கமல் ஹாசன் பிரிப்பார் என்பதைப் பொறுத்தே மயூரா ஜெயக்குமார் அல்லது வானதி சீனிவாசன் வெற்று பெறுவார்கள் என்று தெரிகிறது.

ஆக, வாக்குகளைப் பிரிக்கும் வேட்பாளராகத் தான் கமல்ஹாசன் மாறிவிட்டாரா? சட்டமன்றத்திற்கு போக முடியாதா?

From around the web