12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

 
Anbil-Mahesh

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சில தினங்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்பட்டது.  எனினும், கல்லூரியில் சேருவதற்கு மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தேவை என்பதால் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியை சிறப்பு குழு மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்து வருவதாகவும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web