என்னது... தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வரவில்லையா..?

 
Annamalai-Modi

பிரதமர் மோடி ஜனவரி 12 தமிழ்நாட்டிற்கு வருகை தருவதாக இருந்த நிகழ்ச்சி கொரானா காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி வருவதற்கான முன்னேற்பாடுகள் தமிழ்நாட்டில் பல பரப்பரப்பு மற்றும் சர்ச்சைகளை ஏற்ப்படுத்திருந்தாலும் கூட மோடி வருகைக்கு திமுக அரசை கலாய்த்து  தள்ளினார்கள் இணையவாசிகள் .
 
அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருகை தருகின்ற எல்லா நிகழ்வின் போதும் தற்சமயம் ஆளும் திமுக அரசு , கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களும் கருப்பு பாலூன் பறக்க விடுறதுன்னு அன்றைய நாட்களையே கலவரப்படுத்திவிடுவார்கள். அதேபோல இந்த இணையவாசிகளும் “GoBackModi” டிரண்ட் பண்ணிவிடுவார்கள் .

பலரும் திமுக அரசிடம் கேள்விக்கேட்கும் போது மோடி ஒன்றும் நமக்கு எதிரியல்ல. அந்த அரசின் கொள்கைகள் மட்டுமே நம்ம எதிரின்னு தமிழர் பண்பாடு என்ன உபசரிப்பது தானே ஆகையால் நாம் பிரதமர் மோடியே வரவேற்ப்பது தவறில்லை .

இப்போவரையிலும் நாங்கள் ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் வருகிறோம் எனவும் திமுக தரப்பில் கூறப்பட்டது.

இந்த இடைவெளியில் தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுடன் இணக்கமாக செல்வது நன்மை எனவும், மோடி வருகையின் போது ஜனவரி 12 அன்று மோடி பொங்கல் கொண்டாடப்படும் எனவும் கூறிய நிலையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக பொங்கல் நிகழ்ச்சிகள் ரத்து செய்வதையோட்டி பிரதமர் மோடியின் வருகை தள்ளிவைக்கப்பட்டது. புதுச்சேரியிலும் பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.

From around the web