கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல எல்லா நிறமும் எங்களுக்கு தேவை - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

 
Annamalai

கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல எல்லா நிறமும் எங்களுக்கு தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“அப்போது தமிழ்நாடு அரசு கேட்டுள்ள வெள்ள நிவாரண நிதி ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளதாக அண்ணாமலை கூறினார்.

ஒன்றிய அரசு முதல்கட்டமாக 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எஸ்டிஆர்எஃப் எனப்படும் மாநில பேரிடர் நிதிக்கு தாம் தலையிட்ட பிறகே தமிழ்நாடு அரசு மாநில அரசின் 25 சதவிகித பங்கான 300 கோடி ரூபாயை ஒதுக்கியதாக அண்ணாமலை கூறினார்.

தொடர்ந்து கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல எல்லா நிறமும் எங்களுக்கு தேவை, எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியாது.

தேர்தல் அறிக்கையில் சொல்லாமல் பல மாநிலங்கள் பெட்ரோல் விலையை குறைத்துள்ளன.  ஆனால், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்த திமுக இன்னும் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என்றார்.

From around the web